உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




246

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

தமிழுக்கு ஏற்ற அரசு இன்னும் தோன்றவில்லை. தோன்றியவுடன் நீங்கள் இங்கு எளிதாய் வந்துவிடலாம். எனக்கு அதிகாரம் ஏற்படினும் பயன்படுத்திக் கொள்வேன்.

கு.பூ. 13.8.79

உலகத் தமிழ் மாநாடு

வருக.

மாநாட்டுக்குத் தமிழ்ப் பற்றாளர் திரளாக மாநாட்டை நடத்தும் உரிமையைத் தமிழ்நாட்டு முதலமைச்சரே பெறத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

அடுத்த மாநாடு செனகல் மாநாட்டில் நடத்தவும் செய்யவேண்டும். அதில் தமிழே உலக முதன்மொழி என்பதை ஆங்கில நூல் வாயிலாக நாட்டுவேன். அதற்கு இம்மாநாட்டி லேயே A Chalenge to Western Orients to என்னும் அறைகூவல் விடுக்க இருக்கின்றேன்.

பா.த.க. 20.11.80

உலகம் ஒன்றாதல்

நான் மாநாட்டு வரவேற்புக் குழு உறுப்பினருள் ஒருவன், குழுத்தலைவர் முதலமைச்சரே. பொதுவகையில், குமரிநாடே தமிழன் பிறந்தகம் என்னும் கட்டுரை மாநாட்டு மலர்க்கு விடுத்திருக்கின்றேன். வேறு கட்டுரை ஒன்றும் படிக்கவில்லை.

ஆயின், An Evitone ofthe Lemurian Lanugage and its Ranifications என்னும் ஆங்கிலக் கட்டுரை 10 படிகள் தட்டச்சடிப்பித்து முதல்வர்க்கும் முதன்மையான வெளிநாட்டறிஞர்க்கும் வழங்கப் படும். அதன் இறுதியில் மாநாடு நடத்தும் உரிமையை வையாபுரிக் குழுவிலிருந்து தமிழ்நாட்டரசு கைப்பற்ற வேண்டுமென்றும் அடுத்த மாநாடு செனகல் நாட்டில் நடைபெற வேண்டு மென்றும் அதிலே தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழி என்பது நாட்டப்படவேண்டும் என்றும் உள்ளது. இதற்காகவே இறுதி நாளில் கிளர்ச்சி செய்ய உண்மைத் தமிழர் திரண்டுவர வேண்டும். இனிமேல் தமிழ்நாட்டுப் பிரிவினை இயல்வதன்று. போரை ஒழித்து ஒற்றுமையும் அமைதியும் நல்வாழ்வும் நிலை நாட்ட உலகம் ஒன்றாதல் வேண்டும். ஒன்றிய நாட்டினங்கள் (U.N.) என்னும் ஒன்றாத நாட்டினங்கள் மாறி உலகப் பொது நாயகம் என்னும் ஒரே பொது ஆட்சி தோன்றவேண்டும். தமிழ் எல்லா மொழிகட்கும் அடிப்படை ஆதலால் உலகப் பொது