உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

247

மொழியாதல் வேண்டும். தமிழ்நாடு பிரிந்தால் தமிழ்நாட்டிற் குள்தான் தமிழிருக்கும். சிறை செல்லும்போதே மன்னிப்புக் கேட்கும் இருபதின்மரைக் கொண்டு தமிழ்நாட்டு விடுதலை பெறுவதும் குதிரைக்கொம்பே.

ஆங்கிலக் கட்டுரையை மாநாட்டில் வழங்கப்பல படிகள் வேண்டும். 25.12.80இற்கு மேல் நெய்வேலி அன்பருள் பொறுப்பு வாய்ந்தவர் எனரேனும் இங்குவரின் ஒருபடி தருவேன். அதை நெய்வேலியிற் படியெடுக்கலாம். அச்சிற்கு நாளில்லை.

ஆங்கில நூல் சற்றுப் பிந்திவரும். பிந்தப் பிந்தச் சிறப்பு மிகும். இதுவே தமிழ்ப் பாதுகாப்பு இறுதிநூல். பா.த.கு. 12.12.80 உலகத் தமிழ் மாநாடு

தமிழ்நாட்டிற்குத் தமிழ் மறவருள் இயன்றவரெல்லாம் வருவது தமிழுக்குப் பேறாகும். ஆங்கில நூல் வெளிவரின் உண்மையில் தமிழாரியப் போராட்ட மாநாடகவே மாறிவிடும். ஆரிய ஏமாற்றை அடியோடழித்துத் தமிழை அரியணை ஏற்றிவிடலாம்.

கு.பூ.

சொற்பொழிவு

நான் 31.1.81 மாலை 8 மணிபோல் இங்குப் புறப்படும் 2ஆம் சிறப்பு விரைவுத் தொடர்வண்டியேறி மறுநாள் (4.1.81) காலை மதுரைச் சந்திப்பு நிலையம் வந்து சேர்வேன்.

அன்பு கூர்ந்து அங்குக் காத்திருக்க.

5.1.81 பிற்பகல் 2 மணிக்கு 'மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்' என்னும் பொருள்பற்றி மாநாட்டிற் சொற்பொழி வாற்றுவேன்.

பிற நேரில்.

இரா.இ.27.12.80

மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்

5.1.81 பிற்பகல் 2 மணிக்கு மாநாட்டில் ‘மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்' என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவாற்று கின்றேன். இயல்பவர் எல்லாரும் வருக.

21.217.01.OF. 29.12.80