உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

267

முச்சொற்பட்டி இன்று பேராசிரியர்க்குப் பதிவஞ்சலில் அனுப்பப் பெறும். இதுவரை எழுதப்பெறாத சிறந்த முறையில் எழுதவேண்டியிருப்பதால் அம்முறையை எண்ணியமைக்கக் காலந்தாழ்த்தது. சொற்பட்டியைப் பார்த்தமட்டில், இது, வேறெவராலும் எழுதப்படமுடியாதென்ற எண்ணம் அமைச் சர்க்குத் தானே தோன்ற வேண்டும்.

நாட்டுப்புறச் சொல்

மி.மு.சி. 24.10.70

அகரமுதலித் தொகுப்பும் தொடங்கிவிட்டேன். சொற் றொகுப்பு நாட்டுப் புறச் செலவைப் பிந்திவைத்துக் கொள்ளலாம். அதற்கு மும்மாதம் வேண்டிய தில்லை. ஒரு மாதமே போதும். சென்னை அகர முதலியில் இல்லாத சொற்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கில் தொகுத்து வைத்திருக்கின்றேன். ஒவ்வொரு உருப்படியையும் தங்கட்கு விடுத்தது போல் தனித் தனியாகவே எழுதவிருக்கின்றேன். ஆகவே பிந்திக் கிடைக்கும் சொற்களையும் ஆங்காங்கு உரிய இடத்திற் செருகிக்கொள்ள

லாம்.

பரிசுப்பணம்

தி.வை.சொ. 7.11.70

தமிழ்ப்பற்றில்லாத

அல்லது

தமிழ்ப்பகைவனான

ஒருவன், பலர் எனக்குப் பணவுதவி செய்வதாகவும் அரசுதவி தேவையில்லையென்றும் சொன்னதாகத் தெரிகின்றது. காலும் அரையுமாக ஏழை மக்கள் எனக்குக் கொடுக்கும் பணம் பனி பெய்வதும் சிறு தூறலும் போன்றது.

கடமைப்

அரசு தமிழைக் காக்கவும் வளர்க்கவும் பட்டுள்ளது. பரிசுச்சீட்டுப் பணம் குன்றுபோற் குவிக்கின்றது. அகர முதலிக்கு ஓரிலக்கம் ஒதுக்குவது மிகமிக எளிது.

கொந்துச் சிறப்புச்சொல்

தி.வை.சொ. 12.11.70

செ.சொ.பி.பே.அ. வேலை தொடங்கி விட்டேன். பு.பு. பட்டிக்கொந்தில் மட்டும் வழங்கும் சிறப்புத் தமிழ்ச் சொற்களைப் பொருளுடன் எழுதிவிடுக்க. ஓராண்டிற்குள் விடுத்தாற்போதும்.

கா.இ.மு. 18.3.71