உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




266

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

9. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலிப்பணி

சொற்பிறப்பியல் அகர முதலிப் பொதுக்குழு

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி வெளியீட்டிற்கு நாடு முழுதும் தழுவிய ஒரு பொதுக்குழு அமைந்துள்து. பு.பு பட்டியாரிடம் முழுப் பொறுப்பையும் விட்டிருந்தால் மிக நன்றாயிருந்திருக்குமென்று நினைக்கிறேன்.

பு.பு. பட்டியார் பதின்மார் சென்ற மீ (மே) கோவை மாவட்ட ஊர்தொறும் தாங்கள் முன்பு திருச்சியிற் சென்றது போற் சென்று ஐம்பதினாயிரம் உருபா தொகுப்பதென்று ஒரு பூட்கை கொண்டிருந்தனர். இன்று அவர் ஊக்கம் குன்றி அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டனர். இதுதான் பொறாமை யால் ஏற்பட்ட பொதுக் குழுவமைப்பின் விளைவு.

முதன்மொழி

1.ஆடவை 2001. நா.செ.

முதன்மொழி இதழ்ப் பெயர்கள் பின்வருமாறு முந்தா நாளே பேராசிரியர்க்கு எழுதியனுப்பிவிட்டேன்.

க.சுடர்-கதிர் (ray)

உ.கதிர்-மணி (grain)

ங.ஆரம்-முத்து

ச.செப்பு-அருங்கலம் (அணிகலம்)

ரு.குலை-கனி

சொற்பட்டி

மி.மு.சி. 24.10.70

சென்ற கிழமை முழுதும் என் மூளைக்கு வேலை காடுப்பதுபற்றி மிக அச்சமாயிருந்தது. இக்கிழமை அது பெரும்பாலும் நீங்கியுள்ளது. அடுத்த கிழமை முற்றும் சரியாய்ப்

போம்.