உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

265

அச்சுத்தடை

அகரமுதலி அச்சிற்கு அணியமாயுள்ளது. ஆயின் அச்சீட்டுச் செலவை அரசு இன்னும் ஏற்றுக்கொள்ளாமையால் தடைப்பட்டுள்ளது. தேர்தலுக்குப்பின் நிலைமை திருந்தலாம்.

அ.வா.வெ.செ. 8.4.80

அச்சீடு

என் வாழ்க்கைக் குறிக்கோளை நிறைவேற்றுவதும், மேலையறிஞரின் ஆரிய மயக்கமறுப்பதும், தமிழை மீண்டும் அரியணையேற்றுவதும் அகர முதலியல்லாத என் தனி நூல் களுள் இணையற்றதுமான The Lemurian Language and iits rami- fication என்னும் ஆங்கில நூல் (500 பக்கம்) அச்சேறவிருக் கிறது.

ஆ.மு. 10.11.80