உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




264

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

அச்சகம்

இன்று நான் வாங்கியிருப்பது தென்மொழி அச்சுப் பொறிபோன்றது. அகர முதலி அச்சிடமுடியாது. பிற நூல்கள்தான் அச்சிடமுடியும். அதற்கும் வீட்டுக்காரர் இசைவு தாராமையால் உரிமுறி (Licence) வாங்க இயலவில்லை. அதனால் வேறு வீடு பார்த்துக்கொண்டிருக்கின்றோம். கிடைத்துச் சென்றபின் தான் எழுத்து முதலியன வாங்கி வேலை தொடங்கவேண்டும். இன்றிருப்பன பொறியும் வெட்டுப்பொறியும்தான்.

அச்சுப்

அகரமுதலி நானே திருத்தி ஒரு பிழையுமின்றி வெளிவர ருளைப்பொறி சொந்தமாக இருப்பின் நன்றாம்.

அச்செழுத்து

கா.இ.மு. 15.7.73

அச்சகத்திற்கு எழுத்து வாங்க வேண்டியுள்ளது. என் பொத்தகக் கணக்கில் ஏதேனும்பணம் சேர்ந்திருப்பின் அன்பு கூர்ந்து உடனே அனுப்பிவைக்க.

முப்பது ரூபா வாடகைக்கு ஓர் அறை கிடைத்துள்ளது.

அடுக்காளர் அமர்த்தம்

கா.இ.மு. 30.8.73

அச்சகத்திற்கு அரசினர் இசைவு வந்துவிட்டது. 4.2.74 திறப்பு விழாவும் நடந்துவிட்டது. ஆயினும் போதிய அளவு எழுத்துக்கள் வாங்கிய பின்னரே அடுக்காளனை அமர்த்த விருக்கின்றோம்.

அச்சீடு

கா.இ.மு. 7.2.74

சிங்கைப் புரவலர் 1974இல் கொடுத்த 5000 உரூபாவிற்கு மேற்கொண்டும் 3000 செலவாகிவிட்டது. முன்பு வாங்கிய தாள் மங்கிவிட்டது. இன்று தாள்விலை ஏறிவிட்டது. பணியாளர் கூலியும் உயர்ந்துவிட்டது.

கு.ப. 21.8.79