உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

269

இயக்குநர்

இறைவனருளால் நான் தமிழ்நாடு அரசால் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக (Director) 1500 உருபாச் சம்பளத்தில் நாலாண்டிற்கு அமர்த்தப் பட்டுள்ளேன். நேற்றே வேலை ஒப்புக்கொண்டேன். இடம் இன்னும் ஒதுக்கவில்லை. ஆதலால் ஒதுக்கும்வரை மறைமலை யடிகள் நூல்நிலைய மேல்மாடியிலேயே தங்கிப் பணிசெய்வேன். நாளை மாலை காட்டுப்பாடி சென்று திங்கட்கிழமை திரும்புவேன். அதன்பின் எந்நாளும் எவ்வேளையும் என்னை இங்குப் பார்க்கலாம்.

சு.பொ. 9.5.74.

நற்காலம்

நான் இறைவனை நம்பியிருந்தவாறே, மிகப்பிந்தியேனும் தமிழுக்கு நற்காலம் கிட்டிற்று. இது முற்றும் தவத்திக்குன்றக் குடியடிகளின் தனிப்பெருமுயற்சியின் விளைவாகும்.

து

அகரமுதலிப் பணிக்கு இன்னும் தனியிடம் அமைய வில்லை. பாடப்பொத்தக நிறுவன அலுவலகத்தில் ஒரு சிற்றறை மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் படியெடுப்பார் இருந்து பணி செய்து வருகின்றார். நான் மறைமலையடிகள் நூல் நிலைய வள்ளலார் திருவருள் மண்டபத்தில் தங்கிப் பணி செய்து வருகின்றேன். வீடு இன்னும் ஒரு மாதத்திற்குள் (அல்லது ஒரு கிழமைக்குள் ) கிடைத்துவிடும்.

தலைசிறந்ததொண்டு

அருந்தமிழன்பரீர்,

நலம். நலமாக.

மு.வ.ப. 28.5.74

17.8.74

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்டம் தி.மு.க. அரசு இதுவரை செய்துள்ள தமிழ்த் தொண்டுகளுள் தலைசிறந்தது. அது திரு. அருட் திரு. அருட்செல்வனார் ஆட்சியை நிலைப்படுத்துவது மட்டுமன்றி, நாளடைவில் தமிழ்நாடு முழுவிடுதலையடையவும் வழிகோலும். ஆதலால் தன்னே ரில்லாத தமிழின் அருமை பெருமைகளை உலகறிய வழிவகுத்த