உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

275

ஏனை னை மூவரையும் (புலவர் இளங்குமரனார், பேரா.சதா சிவம், பர். வேங்கடேசனார்) உடனே அமர்த்துமாறு அடுத்த இதழில் வேண்டுகோள் விடுக்க.

மலையாள

அகரமுதலிக்கு 36 பேரும், கன்னட அகரமுதலிக்கு 18 பேரும், சமற்கிருத அகரமுதலிக்கு 22 பேரும் இருக்க. தமிழ் அகர முதலிக்கு இருவரே என்று தெரிவிக்க.

அமர்த்தமும் சம்பளத் திட்டமும்

கு.பூ. 11.9.80

ஒரே ஒரு பதவி தவிர நான் கேட்டனவெல்லாம் தோற்று விக்கப்பட்டுவிட்டன. அறுவர் கணக்கத் துறைக்கும் கடைநிலை யூழியத்திற்கும் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கல்வெட்டுச் சொற்றொகுப்பாளராக ஈரோடு வாசவிக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் சதாசிவம், மருத்துவச் சொற் றொகுப்பாளராக மூலிகைமணி... கண்ணப்பர் மகனார் பர். வேங்கடசேனாரும் அமர்த்தப்படவிருக்கின்றனர்.

பேரா. அசரியாவைப் பதிப்பாண்மை யெழுத்துறவாள ராக அமர்த்தக் கேட்டிருக்கின்றேன். இப்பதவியே தோற்றுவிக்கப்படாதது.

துவரை

உங்கள் வேலை வேண்டுகோள் தலைமையாசிரியர் வாயிலாக வரவில்லை. உடனே ஒன்று அவர் வாயிலாக விடுக்க. சம்பளத்தைப் பற்றி இன்று கவலைப்பட வேண்டியதில்லை.

வேனில் விடுமுறை முடிந்தவுடன் இங்குப் பணியேற்கும் நிலையில் இருக்க விடுமுறைச் சம்பளமும் அங்குப் பெற்றுக் காள்ளலாம். முந்திப் பெறாதிருந்த விடுமுறைச் சம்பளமும் இன்னும் பெறாதிருப்பின் விரைந்து பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யலாம்.

தமிழ்ச் சொற்றொகுப்பாளர் பதவியில் உங்களை அமர்த்த எனக்கே அதிகாரமுண்டு. சம்பளத்திட்டம் மட்டும் சிறப்பாகச சொல்லிப் பெறவேண்டும். அது எளிதாய் முடிந்துவிடும். சற்றுப் பொறுமையாய் இருக்கவேண்டும்.

4.3.80. இரா.இ.