உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




276

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

எவரும் இல்லை

திரு. வி. அசரியா 30.8.80 அன்று பதிப்பாண்மை எழுத் துறவாளராக (Editor of Correspondent) அமர்த்தப்பட்டார். இது நல்லதுதான். ஆயின்போதாது. புலவர் இளங்குமரனாரும், நல்லதுதான்.ஆயின்போதாது. பேரா.சதாசிவமும் பேரா. வேங்கடேசனும் அமர்த்தப்பட

வேண்டும்.

அகரமுதலியின் முதற்பகுதி சென்ற ஆண்டே அச்சிற்கு ணியமாயிற்று. ஆயின், வெளியீட்டுச் செலவுக்கணக்கு விடுத்து ஈராண்டாகியும் இன்னும் அரசு அதை ஏற்றுக் கொள்ள வில்லை. அரசினால் அமர்த்தப்பட்ட அச்சகமும் ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கின்றது.

இளங்குமரனார்

தாம் பணியாற்றும்

உயர்நிலைப் பள்ளியில் ஆயிரம் உருபாச் சம்பளம் பெற்றுக் கொண் டிருக்கிறார். துணைப்பேராசிரியர் சம்பளம் நல்கினால் வர அணியமாயிருக்கிறார். ஆனால் தனியார் பள்ளியில் பணியாற்று கிறார் என்றும், ஆங்கிலப்பட்டம் ல்லை என்றும் அரசு அச்சம்பளத்திட்டம் தரமறுக்கின்றது.

அரசினர் கல்லூரி எதிலும் அவர்போல் அகரமுதலிப் பணியாற்றுவார் எவருமில்லை. ஆங்கிலப் பெரும்பட்டம் பெற்ற பண்டாரகருள்ளும் அவர்போல் இலக்கணம் கற்றாரும் ஆய்ந்தாரும் ஒருவருமில்லை. ஒருவருக்குத் தகுதிபற்றிப் பணியும் சம்பளமும் தரவேண்டுமேயன்றிப் பணியகமும் வீண்பட்டமும் பற்றித் தரலாகாது. ஆங்கிலப் பட்டக் காரருக்குத் தரும் சம்பளத்தைத் தமிழ்ப்பட்டக்காரருக்குத் தரமறுப்பது தமிழ்ப் தமிழ்ப் பற்றுடை

பற்றுடைமையுமாகாது.

பேராசிரியர் சம்பளத்தால் 200 உருபாதான்கூடும்.

துணைப்

மதுரை மாநாட்டிற்கு 3 கோடிக்குமேல் ஒதுக்கியுள்ள அரசு தமிழுக்கு இன்றியமையாத உலகச் சிறப்புள்ள அகர முதலிக்குச் சில இலக்கமேனும் உடனடியாய் ஒதுக்கவில்லை. மாநாட்டிற்குச் செலவிடும் 3/2 கோடியும் விளம்பரச் சிறப் பாகவே முடியும். குமரி மலை முழுக்குத் திரைப்படத்திற்கே 4 இலக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை நிலையாய மெய்ப்பிக்கும் அகரமுதலியைப் பற்றிச் சற்றும் கவனிப்பில்லை.

இவ்வகர முதலியின்றித் தமிழும் வளராது; தமிழனும் முன்னேறான். இவ்வகர முதலியை நானே தொகுக்க இயலும்.