உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

277

எனக்குப்பின் எவருமில்லை. ஆதலால் இன்னும் பத்தாண்டு என்று திட்டமிட்டிருப்பதை ஐயாண்டிற்குள்

முடிக்கக்

கருதுகின்றேன். எனக்கு மூப்பு மிகுந்து வருகின்றது. ஆதலால் 1986-இற்குள் முடித்துவிடல் வேண்டும்.

அதற்கு இன்றியமையாதவை வருமாறு:

1. இளங்குமரனார், சதாசிவம், வேங்கடேசன் ஆகியோர் அமர்த்தம்.

2. எனக்கு ஓர் இயங்கியும் தொலைபேசியும்

3. என் சம்பளஉயர்வு 2000-100-3000 என்னும் திட்டப்படி தொடக்கத்தில் 2000 உருபா கேட்டேன். நெடுஞ்செழியனார் நிலைத்த 1500 ஆகக். குறைத்தார். திரு. ம. கோ. இரா.ஆட்சியில் இவ்வாண்டு அது 2000 ஆக உயர்த்தப்பட்டது. என்போன்ற பதவியாளர் திருவாங்கூரில் தமிழைக் கெடுத்துக் கொண்டு மூவாயிரம் வாங்குகின்றார். தமிழ்நாட்டிலும் என்னினும் தாழ்ந்த தகுதியுள்ளவர். ப.க.க துணைவேந்தராகி மூவாயிரம் வாங்குகின்றனர். என் பணியை வேறொருவரும் செய்ய இயலாது.

இது தலையாயது; தமிழுக்கு இன்றியமையாதது. என் மூப்பினால் என் பணித் திறமும் மிகுந்துள்ளது. கல்வித்துறை இயக்குநர் சம்பளப் பேரெல்லையும் மூவாயிரமே. ஆதலால் உடனே எனக்குப் பேரெல்லைச் சம்பளம் (3000) தரல்வேண்டும். அல்லது ஆண்டுதோறும் கூடியேறும் திட்டப்படி இது 7 ஆம் ஆண்டு ஆதலால் 2700 தரல்வேண்டும்.

நான் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டில் ஒரு செந்தண (Air condition) அறை அமைத்துக்கொண்டு முதுவேனிலிலும் இரவு பகலாய்ப் பணிசெய்து 1986 இற்குள் பிறர்செய்ய இயலாத பகுதிகளையெல்லாம் செய்து முடித்துவிடுவேன்.

இதனால் என் வாழ்க்கைக் குறிக்கோளும் நிறைவேறும். இதை மீண்டும் முதல்வர்க்கெழுதி வற்புறுத்துக.

அகத்திருக்கும் ஆக்கம்

பா.த.கு. 23.9.80

அகரமுதலி முடிய இன்னும் எட்டாண்டு செல்லும். புத்திலக்கியத்தமிழ்ச் சொற்றொகுப்பாளர் பதவி வெறுமை யாகவேயிருக்கின்றது. உதவிப்பேராசிரியர் சம்பளத்திட்டம் பெற முதலமைச்சரைத்தான் பார்த்தல் வேண்டும்.