உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

281

மையலரசன்

நான் தங்கியிருந்த அறைக்குவந்த அன்பருள் ஒருவர் ராஜமோஹன் என்பதற்குத் தென்சொல் வடிவம் வேண்டினார். அரசன் என்பது தென்சொல். ‘மோஹன்’வடசொல். முஹ்மயங்கு, மடப்படு, காதலி, காமி.

முஹ் - மோஹ - மயக்கம், மூடன், காமன், பித்தன் இதற்கு நேர்தென்சொல் மையலன் என்பதே.

மையல்

-

மயக்கம், கடுங்காதல், காமம், பித்தம்.

மையல் மயல்

-

அரசமயலன், அரசமயல் என்றோ மையலரசன், மையலரசு என்றோ வழங்கலாம் எனத் தெரிவிக்க. 3 மேழம் 1999 தி.சு.

சாலை

‘சாலை’ தமிழ்ச்சொல்லே. சாலுதல் - மிகுதல், நிறைதல்,

அகலுதல்.

சாலை அகன்ற இடம், கூடம், அகன்றபாதை.

கனம்

3மேழம் 1999 தி.சு.

‘கனம்

தமிழ்ச்சொல்லே. கனத்தல் என்னும் வினை வடமொழியில் இல்லை. கனம் என்னும் பெயர்ச்சொல்லே யுண்டு. சுமை கனக்கிறது. தொண்டை (குரல்) கனத்துவிட்டது. தலைக்கனம், கனம் (கண்ணியம்) பொருந்திய, முதலிய வழக்குகள் தொன்றுதொட்டுவருவன.

“கனங்குழாய்" (கலித்தொகை

-

75) - கனத்தகாதணி

அணிந்தவளே! கல்-கன்-கன. கனத்தல்- கற்போல் எடைமிகுதல்.

நாவல் (பாரத) க் கனமின் தொழிற்சாலை என்றே குறிப் பிடுக. நாவலந்தேயம் என்பதே பண்டைவழக்கு.

3 மேழம் 1999 தி.சு.

கனம்

கனம் என்னும் சொல்லைப்பற்றிக் கடுகளவும் ஐயம் வேண்டாம். வடவர்காட்டும் மூலம் ஹன் (-கொல்) என்பதே.