உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




286

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

கந்தகத்திற்கு எரி என்ற சொல் மருத்துவ அகரமுதலியிற் குறிக்கப்பட்டுள்ளது. ஆயின், அது மிகப்பொதுவான சொல்.

ஓடாவி

இல.க.இர. 25.10.72

ஓடாவி 1. Shipuright, boat builder, மரக்கலஞ் செய்வோன். 2. Carpenter, தச்சன் என்று Rottler தமிழாங்கில அகர முதலியிலுள்ளதைத்தான் Winslow தம் அகரமுதலியிற் குறித்தார். அதைத்தான் சென்னைப் ப.க.க.த. அகரமுதலி பின்பற்றியது.

ஒடாள்வி =

ஓடாவி.

Fabricus தமிழாங்கில அகரமுதலியிலும் Spaniding ஆங்கில- தமிழ் அகரமுதலியிலும் இங்ஙனமே குறிக்கப்பட்டுள்ளது. கதிரைவேற்பிள்ளை நாகலிங்கமுதலியார் கோபால கிருட்டிண கோன் முதலியோர் தொகுத்த தமிழகர முதலிகளிலும் ஓடாவி என்ற சொல் குறிக்கப்பட்டுள்ளது.

கழகச் செய்யுட்களிலும், கழகம் மருவிய மருவிய பனுவல் களிலும் இச்சொல் இல்லை. ஆயினும், இது பழஞ்சொல்லே. து அண்ணாள்வி அண்ணாவி நாடாள்வி நாடாவி என்பன போன்ற உலக வழக்குச் சொல்லாதலால் செய்யுளில் இடம்பெறவில்லை.

நீகான்

-

-

-

கலவர் - கலம்புணர்மாக்கள் என்பனவே பண்டைச்சொல். மீகாமன் மீகான்; நீகாமன்

-

-

என்பன

சலுத்துநரைக் குறிப்பன; கலஞ்செய்நரைக்குறியா.

கலஞ்

கல்வெட்டு, ஓடப்பாட்டு, கப்பல்பாட்டு முதலிய நாட்டுப் பாடல்கள் பிற்காலத்தனிப்பாடல் முதலியவற்றில்தான் ஒடாள்வி ஓடாவி என்னும் சொல்லாட்சியைப் பார்த்தல் வேண்டும்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திலுள்ள இராமசாமிப் புலவர் இக்காலத் தனிப்பாடல்களைத் தொகுத்து வருகின்றார். ஒருகால் அச்சொல்லாட்சிப் பாடல் ஏதேனும் அவருக்குத் தெரிந்திருக்கலாம். இல.க.இ. 4.2.74.