உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

285

தொள்ளை

இம்மாதக்கட்டுரையில் தொள்ளை என்னும் சொல்லிற்குப் பின் தொள்-தொழு-சிறுகுற்றவாளிகட்குத் தண்டனையாகக் கால்களை மாட்டிவைக்கும் குட்டை என்னும் மரச்சட்டம் என்பதைச் செருகிக்கொள்க. வ.சு.7.8.82

ஊழியம்

ஊழியம் என்பது கழக இலக்கியத்தில் இடம்பெறா வி டினும் தொன்றுதொட்டு வழங்கிவரும் உலகவழக்குச் சொல்லாகும்.

ஊழியம் (மலையாளம்), ஊழிக (கன்னடம் g) ஊடிக தெலுங்கு. g) உழத்தல் - வருந்துதல், வருந்திவினை செய்தல். உழ- உ உழைப்பு. உழைத்தல் - மெய்வருந்த வேலைசெய்தல். உழைப்பு உழைப்பாளன், உழைப்பாளி. உழை ழ ஊழியம் வருந்திச் செய்யும் வேலை, வேலை, தொண்டு, அடிமைவேலை, பொது நலத்தொண்டு, மதத்தொண்டு வேலைக்காலம், (Service)

-

-

மங்கையர்க் கூழியஞ்செய்வது (திருப்புகழ், 548) என்பதில் ஊழியம் தொண்டு. இந்நூலின் காலம் 15 ஆம் நூற்றாண்டு.

தேவவூழியம் (Ecclesixstical work) என்பது கிறித்தவ வழக்கு. ஊழியன் - அடிமை, பணியாள். ஊழியக்காரன் அடியான், வேலைக்காரன், மதவியல் அலுவலன்.

மலர்

மறை. நி. 16.6.71

தங்கள் வயிரவிழாமலர்க் கட்டுரையில் ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழிலயக்கியத்தை என்றிருப்பதை ஈராயிரத்தறுநூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழிலக்கியத்தை

என்று திருத்திக்கொள்க.

-

வ.சு. 6.10.72

கந்தகம்

கந்ககத்திற்கு (Sulpher)ச்சங்க அகராதியில் காரிழைநாதம், பொன்வண்ணக் காரிளை என இருசொல் உள. நாம் காரிளை என்று சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். 18.8.71