உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




284

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

இரண்டொருசொல்

வருகின்ற ஞாயிறு கள்ளக்குறிச்சியடுத்த தேவபாண்டலம் என்னும் ஊரில் ஒரு தமிழன்பர் திருமணத்தை நடத்தி வைக்கச் செல்கின்றேன். திரும்புகாலிற் காட்டுப்பாடி சென்று இரண் டொரு சொற்களை அகரமுதலியிற் பார்த்தபின் விடையெழுது கின்றேன்.

-

அரன் - சிவன்

இல.க.இர. 10.9.69

'நமப்பார்வதி பதயே' என்பது முற்றும் சமற்கிருதம். அம்மையப்ப போற்றி (வணக்கம்) என வழுத்தின் ‘அரகர (அரஹர) மகாதேவா (மாதேவா) என்னும் அடுத்ததொடரொடு மோனையாகப் பொருந்துவதுடன் முற்றுந் தமிழாக இருக்கும்.

அரம் - சிவப்பு. அரன் - சிவன். மகம் - பெருமை. மக - மா- பெரி/ய. வடமொழியில் ‘ஹர' என்னுஞ்சொற்கு அழிப்பவன் என்றே பொருள். முத்திருமேனிகளுள் சிவனை அழிப்புத் தொழிலனாகவே கொண்டுள்ளனர். ஆரியர். சிவநெறித் தமிழர் கொள்கைப்படி சிவன்முத்தொழிலுஞ் செய்யும் முழுமுதற் கடவுள். இது என் ‘தமிழர் மதம்' என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெறும்.

பயிற்சி இல்லை

3.அலவன் 2001.கா.இ.மு.

பர். அசுக்கோ பார்ப்போலாவின் சிந்துக்குறியெழுத்து விளக்கத்தை மேலோட்டமாகப் பார்த்தேன். நுணுகிநோக்க நேரமில்லை. மேலும் அது என் துறையை அடுத்ததன்று. அதில் எனக்குப் பயிற்சியும் இல்லை. இல.க.இர. 5.6.70

வடசொல்லுக்கு நேர்தென்சொல்

திரு அருணனார்க்குத் 'தடையும் விடையும்’ என்னும் நூலில் உள்ள வட சொற்கட்கு நேர் தென் சொற்கள் எழுதி விடுத்த விடை கிடைத்தாவென்று இன்னுந் தெரியவில்லை.

கா.இ.மு. 18.3.71