உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

283

குறு-சிறு

பரு (பெரு) X சிறு, நெடு x குறு, ஆயினும் குறு = = சிறு என்றும் ஆகும். வழக்கு நோக்கி அறிதல் வேண்டும். (எ-டு) குறுங்கட்டில், குறுநொய், குறுமணல்.

குல்-கு (குக்கிராமம் - வ) குட்டை - கட்டை (கட்டைமண்) குள்ளம் (குள்ளவாத்து), குள் - குள்ளம் குள்ளல், குள்ளை, கூழை (கூழைவால்).

சில் - சின் - சின்ன சீனி (சீனியவரை, சீனிமிளகாய், சீனி வெடி) சீனவெடி - சீனநாட்டு வெடி.

நுள் - நுன் (Minute, shap, subtle) நொய், நரி (நரிக்கெளிறு, நரிப்பயறு)

புன் -புல்-சிறு, தாழ்வான, பண்படாத.

பாடி

மிகச்சிறிய, தூள்போன்ற. முட்டு (முட்டுக்

குரும்பை - சிறுகுரும்பை)

சான்றுகள்

இல.க.இர. 6.5.69

தென்மொழியில் ‘ஒன்பது

-

ஒரு கருத்துரை’ என்னும் நுங்கள் கட்டுரை கண்டு மகிழ்ந்தேன். அதன் முடிபை வலி யுறுத்ததற்கு அல்லது எதிரிகள் கூற்றை மறுத்ததற்கு வேறுசில சான்றுகளும் உள்ளன. அவற்றை ஓய்விருக்கும்போது எழுதி யனுப்புவேன்.

இல.க.இர. 8.8.69.

சிறந்த வாயில்

தொண்டு என்னும் சொல்லைப்பற்றி முழுத்தோற்றமான கட்டுரை வரைதற்கு வேண்டிய குறிப்புக்களைத் தொகுத்து வைத்திருக்கிறேன். அவற்றை நேரிற்கேட்டுத் தெளிந்து தங்கள் பெயராலேயே செந்தமிழ்ச் செல்வக்கு ஒரு கட்டுரை வரைய லாம். அது தென்மொழியை விடச் சிறந்த வாயிலாகும்

இல.க.இர.10.9.69