உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




288

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

தோற்றோரியல் (தோற்றோர் - இயல்) என்பது tutorial < 6T Tutor) என்னும் இலத்தீன் சொல்லொடு ஒருசிறிதும் பொருளொத்ததன்று.

கலைமுதியர்

கா. இ.மு. 14.4.75.

கலைமுதியர் அல்லது கலைமுதுவர் என்று சொல்வதே முதுகலை என்பதைவிடப் பொருத்தம்.

முதலில் நான் B.A. யைக் கலையிளைஞர் என்றும் M.A.யை கலைத்தலைவர் என்றும் மொழிபெயர்த்தேன்.

ளமைக்கு எதிர் முதுமையாதலால் சிலர் M.A.யை முதுகலையென்றும், B.A.யை இளங்கலையென்றும் குறிக்க விரும்பினர். இதை ஆட்சிக்குக் கொண்டு வந்ததும் பரப்பினதும் சென்னை மாணவர் மன்றம், அதனொடு தொடர்பு கொண்ட ஆசிரியரும் மாணவரும் அவ்வழக்கைப் பின்பற்றினர்.

இளமை முதுமை என்பன பாடத்திட்டத்தின் தாழ்வுயர்வு அல்லது சுருக்க விரிவு பற்றியவேயன்றிக் கலைபற்றிவை யல்ல. பட்டந்தாங்கியரின் அகவை பற்றியவு மல்ல. புலவர், வித்துவான் என்பனபோல Bachelor, Master என்பன பட்டம் பெற்ற ஆட்களையே குறிப்பன. ஆதலால் இளங்கலை முது கலை யென்பதைவிட இளங்கலையர், முதுகலையர் என்பதே பொருத்தம்.

பட்டம்

கா.இ.மு. 3.9.76.

'S' Science என்பதன் முதலெழுத்தெனக் கருதி 'அ' (அறிவியல்) என்பது குறித்தேன்.

Diploma in Rural Service என்பதை நாட்டுப்புற வூழிய மடல் என்றே மொழிபெயர்த்து 'நா.ஊ.ம.' என்று குறித்தல் வேண்டும். ஆகவே M.A. D.R.S. B.T., என்பதை க.மு; நா.ஊ.ம; க.இ. என்று குறிக்க. க.இ-கற்பிப்பு இளைஞர்.

Diploma என்பதற்கு மடித்ததாள் என்பதே முதற்பொருள். முடங்கல் என்பது கடிதத்தைக் குறிப்பதனால் ‘மடல்’ என்றேன்.

கா.இ.மு. 3.9.76.