உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

66

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

“முத்து வீரியம் முக்கியம், வருகிற விடுமுறைக்குள் எனக்கு ஒன்று வாங்கி வையுங்கள். தேம்பவாணியும் ஒரு தொகுதி வேண்டும்."6

66

'தயைசெய்து கீழ்க்கண்ட இலக்கண நூல்களை ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்க, அவை என் நூலாராய்ச்சிக்கு இன்றியமையாது வேண்டுவனவாய் இருக்கின்றன. என் புத்தகங் களை அச்சிடாவிட்டாலும் 3 மாதத்திற்குள் பணம் கட்டி விடுகிறேன்.

1.

இறையனார் அகப்பொருள்

2. தொல்காப்பியம் (நமச்சிவாய முதலியார்) மூலம்

3.

4.

5.

6.

7.

8.

9.

தொல்காப்பியம் பொருளதிகாரம் 4 Vol. நச்சினார்க் கினியம், பேராசிரியம் (பவானந்தர் கழகம்).

நன்னூல் மூலம் 2

நன்னூல் விருத்தி - சங்கர நமச்சிவாயர்

சிதம்பரப்பாட்டியல்

தண்டியலங்காரம் அ. குமாரசாமிப் பிள்ளை

முத்துவீரியம்

பன்னிருபாட்டியல்

பன்னிரு பாட்டியல் கிடையாதிருக்கலாம். முத்துவீரியம் கிடையாவிட்டால் உங்களதை அனுப்பி வையுங்கள்

7

"ஒன்பது இலக்கண நூல்கள் அனுப்பும்படி வேண்டி யிருக்கிறேன். தயவுசெய்து ஜூலை 15-ம் உக்குள் அவற்றை அனுப்பி வைக்க.

“என் புத்தகக் கணக்கில் அவற்றைக் கேட்கவில்லை. ஏனென்றால் ஒன்றையாவது வெளியிடுமுன் அதிகமாகக் கேட்க விருப்பமில்லை. என் புத்தகங்களில் ஒன்றையாவது வெளி யிடாமற்போனாலும் அவற்றின் விலையை 3 மாதத்திற்குள் கொடுத்துவிடுவேன். சுமார் 30 ரூக்குப் புத்தகங்களைக் குறித் திருக்கிறேன்.

6.24-7-31 (வ.சு.)

7. 28-7-31(வ.சு.)