உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

.

291

திக் திச் வடவர் திசையைத் திக் என்றும் கூறுவர். இது தமிழில் திக்கு என்று வழங்குகிறது. கிரேக்க மொழியில் இது தேய்க் (deik) என்றும் நிற்கும்.

ச.க; பா.த.கு. 20.11.80

பாரி

நுங்கள் ‘பாரியைப் பார்த்தேன். முற்றும் சரிதான். ஆயின் ‘அவல்’ சிறிது மாற்றம் பெறல்வேண்டும். மேலும், அவலம் என்பது இத னாடு தொடர்புடையதன்று. அல்-அ, அவலம்- வலமின்மை, நோய் - வருத்தம். என்னிடம் சிறிது பயிற்சி பெறின், என்போன்றே செந்தமிழ்ச் சொற்பிறப்பியற் பணியாற்றலாம். இரா.இ. 20.11.80.

தமிழ்க்கழகம்

இம்மாதச் செந்தமிழ்ச் செல்வியில் வரும், மதுரைத் தமிழ்க்கழகம் என்னும் என் கட்டுரையை உடனே பார்க்க. நண்பர்களையும் பார்க்கச்சொல்க. அடுத்த மாதக் கட்டுரையை யும் (உலகத் தமிழ்க்கருத்தரங்கு மாநாடு) பார்க்க.

கதம்பம்

ச.க; பா.த.கு. 20.11.80

‘கதம்பம்’ தென்சொல்லே.

கல-கலம்பு-கலம்பம். 18 பகுதிகள் கலந்து பனுவல். கலம்பகம் - கதம்பம் - பலவகைப்பூ கலந்த மாலை.

ஒ.நோ; சலங்கை - சதங்கை.

ச.க; பா.த.கு. 20.11.80.

கலைச்சொற்கள்

Shirt collar - உட்சட்டைக் கழுத்துப்பட்டி

Rough Note - கரட்டுக்குறிப்பு

Fair Note - செவ்வைக் குறிப்பு

Note Book - குறிப்புப் பொத்தகம்

Geometry Box - வடிவக் கணக்குப் பெட்டி

Geomentry - ஐ வடிவளவை என்றார் மாணிக்கநாயகர்