உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

பாவாணர் தமிழ்க் குடும்பம் பற்றிப் பாவாணர்

293

ந்நெய்வேலி நகரமைப்பில், பாவாணர் தமிழ்க்குடும்பம் என்று, தமிழுணர்ச்சியாலும் பணியக ஒருமைப்பாட்டாலும் ஒன்றுபட்டு திருநாள் பெருநாட்களில் கூட்டுக் குடும்பம் போலும் நெருங்கிய உறவினர் போலும் உண்டாட்டில் ஒன்று கலக்கும் ஒருதனித் தமிழ்க் கூட்டமான பதினொரு குடும்பத் தொகுதியால், நானும் என் நண்பரும் இன்று உயர் பெருந் தரமாக விருந்தோம்பப் பெற்றோம்.

தமிழுணர்ச்சியும் உழுவலன்புங் கலந்த அறுசுவை யின்னடிசிலும், என் பெயர் தாங்கலும், இவ்வுலகில் உவமை யில்லா ஒரு தனிச்சிறப்பும், என் உள்ளத்தை மறுமையும் மறவா வாறு இறுகப்பிணித்துவிட்டன. இக்குடும்பம் மேன்மேலும் தழைத்தோங்க எல்லாம் வல்ல இறைவன் என்றும் அருள் பொழிக.

நான் பட்டுள்ள கடன்

ஞா. தேவநேயன்

தமிழுலகிற்கும் அரசிற்கும் சிறப்பாகத் தவத்திருக் குன்றக் குடி அடிகட்கு, நான் பட்டுள்ள கடனைத் தீர்ப்பதற்கும் இறைவன் எனக்கிட்ட பணியை நிறைவேற்றுவதற்கும் நாலைந் தாண்டு பன்னிருமாதமும் எழுநாளும் என் இன்பக் கடமையைச் செய்ய வேண்டியனவனா யிருக்கின்றேன்.

நூலுரிமை விற்க

அ.செல்லத்துரை. 3.5.71

என்வீட்டுக்காரர் வீட்டை விற்கப் போகின்றார். வேறொருவர் வாங்கின் என்னை வெளியேற்றி விடுவார். என் 20நூல்களின் உரிமையை விற்கவிரும்பினேன். 20 ஆயிரம் கொடுத்து வாங்கத் தக்க பொத்தக வெளியீட்டாளர் யாரேனு மிருப்பின் தெரிவிக்க.

20.5.72. திரு.அ.சாமிக்கண்ணு அரூர்.

செ.சொ.பி.அ. வெளியீடு

செ.சொ.பி.அ. முதற்பகுதி முடியும் நிலையில் உள்ளது. கருவிநூலான பல ஆங்கில அகர முதலிகளும் கலைக்களஞ்சி யங்களும் வரலாற்று நூல்களும் வாங்கப்பட்டுள்ளன.