உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




294

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

முதன்மடலம் அண்மையில் முடியுமாயினும் 3 ஆம் ஆண்டிலேயே அச்சீட்டு வேலை தொடங்கும். சிறந்த அச்சகத்தில் கொடுக்க வேண்டும். கூலி மிகுதியாயிருக்கும். கையிற்பணம் வைத்திருக்க வேண்டும். பன்னிரு மடலமும் தொடர்ந்து அச்சாதல் வேண்டும். பலர் ஒழுங்காகப் பணம் அனுப்பாததினால் இன்று வெளியீட்டுத் தொகை 10.7.50 (பத்தாயிரத் தெழுநூற்றைம்பது) தான் சேர்ந்துள்ளது.

20.5.72 திரு.அ. சாமிக்கண்ணு, அரூர்

ம் பெயர்தல் அருமை

வீடு பற்றி எழுதியமைக்கு நன்றி.

இனிமேல் நான் இடம் பெயர்ந்தால் சென்னைக்கோ அதன் அருகிற்கோ தான் செல்ல வேண்டும். நூல் வெளி யீட்டிற்கு அதுதான் ஏற்றது.

என்பொத்தகக் களஞ்சியத்தைகி கடத்தியுய்ப்பது அரிதாய் இருக்குமாதலால் இங்கேயே இருக்கத்தீர்மானித்து விட்டேன். சில்லாண்டு பொறுத்தேனும் இவ்வீட்டை மென்றிருக்கிறேன்.

வாங்கிவிடலா

6.6.72 திரு.அ. சாமிக்கண்ணு. ஆரூர்.

இம்மியும் உதவாக் காலம்

நெய்வேலி உ.த.க. முன்னாள் மேலைக்கிளைச் சார்பாக விடுத்த அன்பளிப்புப் பணவிடை பெருமகிழ்ச்சியொடு பெற்றேன். நன்றி அரசோ பல்கலைக் கழகமோ தமிழ்த் தொண்டிற்கு இம்மியும் உதவாத இக்காலை நெய்வேலித் தமிழ்நேயர் ஒரு நற்றொகை நன்கொடையாக விடுத்தது மிக மிகப் பாராட்டத் தக்கதே.

மெல்லாடை

மா. தமிழ்மணி. 16.12.72

நீங்கள் திருமண அன்பளிப்பாக விடுத்துள்ள கட்கினிய அணிவிருப்ப மெல்லாடையைப் பெருமகிழ்ச்சியொடு பெற்றுக் காண்டேன். நன்றி மணமக்கள் இறைவனருளால் வாழ்வில் நீடவேண்டும்.

ன்ப

மு. அறவாழி தமிழரசி 14.9.78