உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

307

இசைந்து வாழ்தல்

இனிமேல் உங்கள் இருவரள் யார் எழுதினாலும் சரி; 'நாங்கள் இருவரும் இசைந்து வாழ்கின்றோம்' என்றே தொடங்க வேண்டும்.

பெரிய பேறு

க.பெ.சி. 20 துலை 2001

பெண்களுக்குச் சமவுரிமை நம்நாட்டில் இல்லாததனாலும் அதிகாரம் செல்வம் வலிமை ஆகிய மூன்றும் ஆ ரிடத்திலேயே இருப்பதானாலும் பொதுவாகப் பெண்களின் குற்றங் குறைகளையே எடுத்துக் கூறுவார்கள். கணவன் மனைவியைக் கவனிக்காவிடின் கண்டிப்பாரில்லை. உனக்கோ உனக்குச் சமவுரிமை அளிக்கின்ற காதற்கணவனைக் கடவுள் அளித்திருக்கின்றார். இது பெறற் கரிய பேறு. உன் இல்லற வாழ்க்கைக்கு வேண்டிய செல்வத்தையும் இறைவன் தந்திருக் கின்றார். இந்நிலையில் உனக்கொரு குறையுமில்லை. கவலைக் கிடமில்லை. மண்ணுலகிலே விண்ணுலக இன்பம் பெற்று மகிழலாம்.

66

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்'

என்று திருவள்ளுவர் கூறுகிறபடி முதலில் உன்னைப் பேணி உன்முழு வலிமையாலும் உன் கணவனைப் பேணிப் பிறர் புகழுமாறு நடந்து கொள்வாயாக. கணவனிடத்தில் என்றும் இன்சொல் சொல்லி அன்பாக இரு.

அன்னகாமு க.பெ.சி. 20 துலை 2001

மனக்கவலை மாற்றல் அரிது

கரை கடந்து கடன்கொண்ட வெட்டியும் கிணற்றில் நீரின்மையும் மழையும் பொய்யாமையும் துன்பமானவையே, ஆயினும் அவை நம் ஆற்றலுக்கு அப்பாற்பட்டவை யாதலால் கவலைப்பட்டும் உடல் நலக்கேடன்றிப் பயனில்லை. எல்லாம் வல்ல இறைவனை நோக்கி உருக்கமாகத் தொடர்ந்து வேண்டுக.

66

'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது”

க.பெ.சி; 16.8.77