உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




308

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

கவலைக் கேடு

என்னையும் நுங்கள்குடும்பத்தில் ஒருவனாக் கருதுவதால், நுங்கள் திறமைக்கு மிஞ்சிச் சிறப்பாக அல்லது மிகையாக எனக்கொன்றும் விடுக்க வேண்டேன்.

கடுகளவுங் கவலைக்கிடமான எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. கவலை கறியைத் தின்னும்; பேராசைப்படவுங் கூடாது, போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து.... உள்ளதே போதுமென்று பெற்றதுகொண்டு பொந்திகைப் படவேண்டும். வருவாய்க்குத் தக்கவாறே செலவு செய்ய வேண்டும். “வளவன வாயினும் அளவறிந் தளித்துண் ளித்துண்" என்பது ஒள ஒளவையார் பொன்மொழி

வளவன்

-

வளநாடுடைய சோழன்.

கடந்து போனதை நினைத்து கவலைப்படக் கூடாது.

“போனதை நினைப்பார் புத்தி கெட்டவர்.’

இறைவன் துணையைத் தேடி இயன்றவரை முயன்று கூழானாலும் தன் உழைப்பால் வந்ததைக் குடித்து மகிழ்ச்சியா யிருந்தால் நீடு வாழலாம்.

க.பெ.சி; 2 சுறவம் 2001

ஒரு விளக்கம்

முந்தின அட்டையில் பேராசை கூடாதென்று கூறினேன். ஆயின், அதற்குச் சில விலக்குகளுண்டு. பிறர் பொருளைக் கவர்தற்கும் பிறர்க்குதவாது வைத்துக் காத்ததற்கும் வாழ்நாள் குன்றுமளவு உடலை வருத்துவதற்கும் பேராசை கூடாது. ங்ஙனமன்றி இயன்ற அளவு பொருளீட்டுதல் எல்லார் தலை மீதும் விழுந்த கடமையாம்.

“அருளில்லார்க்... யாங்கு "பொருளல் லவரை... பொருள்"

“எண்பொருள் ... ஒருங்கு

"செய்க பொருளைச்... இல்"

க.பெ.சி. 28 சுறவம் 2001