உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

23

66

2. பன் மொழிப் பயிற்சி

“ஆர்வமும் அக்கறையும் உடையவர்களும், மொழிப் புலமைக்குரிய கூர்த்த மூளை அமைந்தவர்களும் ஐம்பது மொழி களைக் கூட கற்றுக்கொள்ள முடியும்” எனச் சுட்டுவார் பாவாணர்! அஃதவர் படிப்பறிவை மட்டுமன்றிப் பட்டறிவும் இயைந்து கண்ட முடிவு என்பது வெள்ளிடையாம். ஆய்வு நெறிப்பட்ட தொடக்க நாள் முதல் அறிவில் தலைநின்ற இறுதிக் காலம்வரை பலப்பல மொழிகளைப் பயின்று வந்தவர் பாவாணர் என்பதற்கு, அவர்தம் கடிதங்கள் சான்று பகர்கின்றன. அவற்றுள் வரும் குறிப்புகளுள் சில :

"மூர் அங்காடியில் பழைய கட்டிடத்திலுள்ள புத்தகக் கடை வரிசையில் வட பகுதியில் ஒரு கடையில் மலையாள லக்கணப் புத்தகம் ஒன்று கண்டேன். பொருளல்லாமல் வந்துவிட்டேன். 5 அணாவிற்குக் கேட்டேன். இசையவில்லை 8 அணாவிற்கு இசைவான். எங்ஙனமும் ரூ. 1க்கு மேற்படாது. சையுமாயின் வாங்கிச் செல்வியொடு சேர்த்தனுப்பு."எ

667

“புதுக் கட்டடத்தில் கீழ் வரிசையில் கீழே ஒருவன் சில அரசாங்க வெளியீட்டுப் பழம் புத்தகங்களை விற்றுக் கொண் டிருந்தான். Arabic English Vocobulary ஒன்று எட்டணாவிற் கிசைந்தான் பொருளில்லாது வந்துவிட்டேன்.“2

“ஹிந்தி பயில்கின்றேன்“3

“French grammer, German grammer இவ்விரண்டும் சென்னை மூர் அங்காடியில் கிடைக்கும். சென்ற கமலநாதன் முதலியார் அவர்களை அங்குப்போய் விசாரித்து எழுதச் சொன்னேன். அவர்கள் போய் Germen grammer இருக்கிறதென்றும் 1 ரூ. விலையென்றும் எழுதினார்கள். உடன் பணம் அனுப்ப முடிய வில்லை. தயவுசெய்து உடனே முதலியார் அவர்களிடம் பணம் கொடுத்து வாங்குவித்து, கோபால் பிள்ளை ஆள்மூலம் அனுப்பிவிடுக

664

2. 4-10-34 (வ.சு)

1. 4-10-34 (வ.சு)

3. 13-11-35 (621.&)

4. 23-8-39 (வ.சு)