உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

“தயவு செய்து உடனே Arabic grammer, Hebrew grammer, chinese Self-taught&grammer Higginbothams வாயிலாய் வருவித்துத் தருக. அதே கழகத்து அல்லது பிறவெளியீட்டு French grammer, German grammer இவ்விரண்டும் சென்னை மூர் அங்காடியில் கிடைக்கும்.5

66

ஆஸ்திரேலியம் மிகத் தேவை. சீனம் (china) மலேயம் (Ma- laya) என்பவற்றிற்குக் கிடைத்தாலும் வாங்கிவைக்க"."

66

“ஆங்கிலச் சொற்பொழிவுகளுக்குப் பயின்று வருகிறேன். சில நூல்களும் எழுதிவருகிறேன்

66

667

கருநாடக இலக்கியக் கழகம் அரசின் உதவிகொண்டு ஒரு கன்னட அகரமுதலி வெளியிட்டு வருகின்றது. மொத்தம் 5 மடலம். 3 வெளிவந்துள்ளன. எஞ்சியவை இனி வெளிவரும். மொத்த விலை 120 உரூபா. அதைக் கட்டிவிட்டால், பதிவு செய்துகொண்டு மும்மடலத்தையும் உடனே கொடுத்துவிடுவர். னையிரண்டையும் வெளிவந்தபின் பெற்றுக்கொள்ளலாம். பணம் கையில் உள்ளது.

முகவரி

Secretary,

Kannada Sahitya Parisat Mahakavi Road, Bangalore-18

அன்பு கூர்ந்து உடனே சென்று வினவியறிக. கிடைக்கு மாயின் நீங்கள் இங்கு 5 அல்லது 6 வந்தபின் நேரில் தருவேன். பின்னர் திரு. தமிழ்க் குடிமகனோடு இங்கு வரும்போது வாங்கிக் கொண்டு வரலாம்.“8

1934 இல் கிளர்ந்த ஆர்வம் வாழ்வின் நிறைவு வரை குறைந்ததோ! என்றும் புதுமொழி பயிலும் மாணவராக அன்றோ அவர் இருந்தார்! எட்டணாவுக்கு இசையும் நூலையும் அத் தொகை தந்து வாங்கமுடியாத வறுமை, அஞ்சற் செலவும் இருப்புப்பாதைச் செலவும் நீங்குதற்குரிய சிக்கன நடவடிக் கையைத் தூண்டும் முட்டுப்பாடு இருந்தும் நூல்களைத் தேடித் தேடி வாங்கிக் கற்கும் தேர்ச்சிக்குக் குறைவொன்றும் இருந்த தில்லையே! இவ்விழுமிய பன்மொழி வேட்கையால்தானே, தமிழ் வரலாற்றில் 58 மொழிகளில் வேர்ச்சொல் ஒப்புமை காட்டிப் பட்டியலிட்டு வைக்க வைத்தது!

5. 23-8-37 (வ.சு)

7. 7-4-46 (வ.சு)

|

6. 29-12-37 (வ.சு)

8. 1-11-78 (கு.பூ.)