உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

25

3. தொண்டின் உறைப்பு

பாவாணர் தம் நூல் வெளியீட்டுக்குப் பலர் உதவியை நாடியதுண்டு; சிலர் தாமே நாடிவந்து நயந்து அவாக்கு உதவியதும் உண்டு; நூல்களை விற்றுப் பணம் தண்டித் தந்து உதவியர்களும் உண்டு. அவ்வுதவிகள் பாராட்டுக்கு உரியவை. ஒவ்வொரு நன்றியையும் உள்ளாரச் சொல்லியும், எழுதியும், நெஞ்சார நினைந்தும் போற்றிய பெருந்தகையர் பாவாணர்.

குமணன் தந்த கொடைக் களிற்றைத், தம் கொடையாக விடுத்த கழகக் காலப் புலவர் பெருஞ்சித்திரனார் பெரு மிதம்போலப் பெருமிதமும், 'எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே' என்பது போன்ற பெருந்தகைமையால் தம் கைப்பொருள் செலவழித்துக் கொண்டு சென்றும் தொண்டு செய்ய முந்தும் முனைப்பும் அவர்தம் கடிதங்களில் ஆங்காங்கே மின் னாளி செய்கின்றன! அவற்றுள் சிலவற்றைக் காண்க.

“8-3-64இல் நடக்க இருப்பது குறைந்த சம்பளத் தமிழா சிரியர் வகுப்பாதலால் ஒருவரையும் வற்புறுத்தவோ இடர் படுத்தவோ வேண்டேன். பெற்றது கொண்டு பொந்திகை (திருப்தி) யடைவேன். தங்கற்கும் அறையமர்த்த வேண்டிய தில்லை. என் உறவினர் வீட்டில் தங்கிக்கொள்வேன். வழிச் செலவுப் பணமும் வந்தபின் வாங்கிக் கொள்கிறேன்‘

667

"மதுரை மாணவர் அனைவரும் ஓரிடத்திற் கூட இயலின் நான் வந்து மொழிச்சிக்கல் பற்றி விளக்கமாய்ப் பேச அணிய மாயிருக்கிறேன். போகவரப் பேரியங்கிக் கட்டணம் கொடுத்தாற் போதும். அதுவும் இல்லாக்காலும் வருவேன்‘

66

662

தொண்டு கருதி (தகடூர்க்கு)ச் செல்லக் கருதினும் அங்குக் கூட்டம் சேர்வதில்லை. திரு.செல்லையாவும் சொற்பொழி வாளரும் தான் பெரியோர். அவையோரெல்லாம் தெருவில் விளையாடும் சிறுவர் சிறுமியரே"3

1. 29-2-64 (மி.மு.சி.) 3.23-6-69 (மி.மு.சி)

2. 20-1-68 (வீப.கா.சு.)