உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




322

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள் (10) அமைப்புகள் இதழ்கள் நூல்கள் ஆகியவற்றுக்கு வாழ்த்து (16) என்பவை (48) இடம் பெற்றுள்ளன (13; -60).

இவற்றுள் நேரிசை வெண்பா (29) குறள் வெண்பா (1) ஆசிரியப்பா (5) கலிவிருத்தம் (8) கலித்தாழிசை (2) கட்டளைக் கலித்துறை (2) எண்சீர் ஆசிரிய விருத்தம் (1) என்னும் பாவகைகள் உள (48).

66

இவற்றுள் அச்சில் வெளியிடப்பட்டவை 29; அச்சில் வெளிப்படாது முதன் முதலாக அச்சில் வருவன 19. “மறைமலை என்னும் மறையாமலையின்” என்னும் வெண்பா தமிழ்வரலாறு, தமிழர் வரலாறு என்னும் இரண்டு சுவடிகளிலும் இடம் பெற்றுள (பக்.295; 334)

மூன்றாம் பகுதி இரங்கல்' ஆகும். இதில் ஆகும். இதில் அறுவர் இரங்கல் பாக்கள் உள. இதில் இடம் பெற்றுள்ள பாடல்கள் 23 (61-63). இவற்றுள் கலிவிருத்தம் 10. கலித்தாழிசை 3. அறுசீர் ஆசிரிய விருத்தம் 10; இவற்றுள் இதழ்களில் அச்சிடப்பட்டவை 18; பாவாணர் கடிதங்கள் என்னும் நூலில் அச்சிடப்பட்டவை 5.

நான்காம் பகுதி நன்றி என்பதாம். இதில் 47 பாடல்கள் உள (84-130). இவற்றுள் வெண்பா 40; அகவற்பா 2; கட்டளைக் கலித்துறை 5. நூல்வெளியீட்டு உதவி, நூல் வெளியீட்டுக்குழு உதவி, மணவிழாக் கொடை, மணிவிழாக் கொடை உதவி, மெய்ப்புப் பார்த்த உதவி என்பவற்றுக்கு விடுத்த நன்றிப் பாடல்கள் இவை. நூல்களிலும் இதழ்களிலும் வெளிவந்தவை.

இதன் ஐந்தாம் பகுதி ‘ஐந்தகம்' என்பது. இதில் ஈர் ஐந்தகங்கள் உள. பத்துப்பாடல்கள்; இதழில் இட டம் ம் பெற்றவை. அறுசீர் விருத்தம் முன்னது; பின்னது வெண்பா.

6

ஐந்து' என்பது தலைப்பு ‘பதிகம்’, பத்தாவது போல் ‘ஐந்து’ ஐந்தகம் என ஆளப்பெற்றதாம் (131-140).

உள

ஆறாம் பகுதி பதிகம். இதன்கண் ஒன்பது பதிகங்கள் ள (141-232). திருக்குறளைப் பற்றியது ஒன்று; வெள்ளக் கொடுமை பற்றியது ஒன்று; வங்க வாகை பற்றியது ஒன்று; எஞ்சிய ஆறும் பெருமக்களைப் பற்றியவை. பெரியார், சிதம்பரனார், மறைமலையார், பாரதிதாசனார், சேலம் இராம சாமியார், சிங்கபுரி கோவலங்கண்ணனார் என்பார் அவர். பாரதிதாசனாரைப் பற்றிய பதிகமும், வெள்ளச் சேதவிளரிப் பதிகமும் பதினொரு பாடல்களையுடையவை. எஞ்சியவை பத்துப்பாடல்களே.