உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

323

இவ்வொன்பது பதிகங்களுள் வெண்பா 6; கலிவிருத்தம் 1; அறுசீர் அகவல் விருத்தம் 1; எழுசீர்ச் சந்தவிருத்தம் 1.

இலக்குவனாரைப் பற்றியதொரு பதிகம் இரங்கல் பற்றியது. ஆகலின், அப்பகுதியில் இடம் பெற்றது; டம் பெற்றது; இப்பகுதியில் இடம் பெற்றிலது.

இவையெல்லாமும் நூல்களிலாதல் இதழ்களிலாதல் அச்சிடப்பெற்றவை. இப்பகுதியிலுள்ள பாடல்கள் 92.

ஏழாம் பகுதி வரலாறு பற்றியது. இதில் இடம்பெற்றவை இரண்டே (233, 234). இரண்டும் அகவற்பா. இரண்டும் உயர் தரக்கட்டுரை இலக்கணம் ரண்டாம் பகுதியில் வெளி வந்தவை. ஒன்று சாமிநாதர் பற்றியது; மற்றொன்று அவர் எழுதிய வரலாற்றைப் பற்றியது.

எட்டாம் பகுதி கதை. இதில் இரண்டு கதைகள் இடம் ம் பெற்றுள (235-253). 'பள்ளிக் கணக்கு புள்ளிக்குதவாது' என்பது ஒன்று; நன்றியுள்ள சேவகன் என்பது மற்றொன்று. முன்னதில் அறுசீர் அகவல் விருத்தம் 11. பின்னதில் கலித்தாழிசை 8. ஆகப் பத்தொன்பது பாடல்கள். இவையும் உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பகுதியில் இ ம் பெற்றவையே.

ஒன்பதாம் பகுதியில் பலவகைப் பொருள்கள் இடம் பெற்றுள. திருவள்ளுவர் ஈராயிர ஆட்டை விழாச் செய்தி என்பது தொட்டுத் தலையாய தமிழர் என்பது ஈறாக ஒன்பது உட்பகுதிகளைக் கொண்டது. மொத்தப் பாடல்கள் 21 (254-274)

இவற்றுள் அகவல் 3, குறள் வெண்பா 6, கலிவிருத்தம் 5, அறுசீர் விருத்தம் 2. எண் சீர் விருத்தம் 1, இசைப்பா 2. கும்மிப்பா 1 நூற்பா 1, இவற்றுள் போலிகைப்பாடல் என்னும் றுதிப்பகுதி குறளும் சிவஞான போதமும் நாவுக்கரசர் தாண்டகமும் கொண்டு எழுந்தவை. ஒன்று நூற்பா; மற்றிரண்டு புதுநூற்பா. அனைத்தும் அச்சில் வந்தவை.

திருவள்ளுவர் ஈராயிர ஆட்டைவிழாச் செய்தி பற்றிய அகவல் 108 அடிகளைக் கொண்ட நெடியது. நூற்பா ஓரடியால் ஆய சிறியது.

டம்

முடிநிலை என்னும் பத்தாம் பகுதி 23 பாடல்களையுடையது (275-297). நூல்களின் முடிவுகளாகவும் வாழ்த்துகளாகவும் இ பெற்றவை. வெண்பா 22. அகவல் ஒன்று; அவ்வொன்றும் சிவஞான போதப்போலிகை. அது பிறிதிடத்தும் பிற வடிவிலும் வந்துள்ளது (254-273)