உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




324

297.

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

பாடல்கள்

இப்பத்துப் பகுதிகளிலும் இடம்பெற்றுள்ள பாட

இவற்றுள் நேரிசை வெண்பா 159, கலிவிருத்தம் 40, அறுசீர் அகவல் விருத்தம் 39, அகவற்பா 13, கலித்தாழிசை 13, குறள் வெண்பா 10, சந்தவிருத்தம் (ஏழுசீர்) 10, கட்டளைக் கலித்துறை 7, எண்சீர்விருத்தம் 2, கும்மி 1, சைப்பா 2, நூற்பா. குறிப்புகள் சில:

பாயிரப்பகுதியில் தமிழைக் குமரிநிலத்தெழுந்த கோமொழி' என்கிறார். 'கோ' தலைமை, தெய்வம் இவ்விரு பொருளும் தருவதுடன் ‘ஆன்' என்னும் பொருளும் தருவது. கன்றீனும் கறவை என்னப்பன்மொழிக்குத் தாயாகத் திகழும் வரவு நோக்கிக் ‘கோமொழி' என்றமை பாவாணர் தம் ஆய்வுப் பொருளை அப்படியே முழுதுறத் திரட்டி வைத்ததாம்.

பாவாணர் கொண்ட இறைமை அழுத்தமும் சொல்லாய்வுத் தெளிவும் ஒருங்கு வெளிப்படுவது, ‘கடவுள்' என்னும் பெயர்ப் பொருளை அறிந்துகொண்டால் ‘நாடாமல் உண்டென நம்பு' என்பதில் இருந்து வெளியாகின்றது.

'இழுக்குடைய பாட்டுக்கு இசைநன்று' என்றொரு கருத்து இடைக்காலத்தே சில புலவர்களிடம் இருந்தது. ஆயின் இசைத் திறம் நன்குணர்ந்த பாவாணர் “குறையும் எழுத்தினால் கூடுவ தினிமையே, அறையும் அளபெடை ஆக்கியே எழுத்தொலி, நிறையும் அளவுற நீட்டுக” என்று சொல்வதுடன் தம் இசைத் தமிழ்க் கலம்பகத்திலே ஆட்சியும் செய்துள்ளமையைச் சுட்டுகிறார். அன்றியும், “தீந்தமிழைத் தெருவெலாம் பரப்புதற்குப் பாடற்குழாம் ஒன்று ஏற்படுத்துக” என்று கட்டளையிடுகிறார்.

துறைவல்ல அறிஞர்கள் கூறும் திருத்தத்தை ஏற்றுப் போற்றுவதற்குத் தாம் அணியமாக உண்மையை, “என்றும் திருத்தம் இயம்பும் அறிஞரின், நன்றி அறிவேன் நனி” என்பதால் மெய்ப்பிக்கிறார். கல்வி கண்மூடித்தனத்தைக்கொண்டு கண் மூடித்தனத்தை வளர்ப்பதற்கு அன்று என்பதையும் பகுத்தறிவை ஆக்குவதற்கே என்பதையும் ஒரு முறைக்கு இருமுறை தெளிவு செய்கிறார்.

மணமக்கள் இணைந்து இன்பந்துய்த்தலைப் “புலியாணம் ஒன்றாகிப் பொருவரிய இன்பந்துய்த்து” என்பது புதுமையான ஆட்சி. அருமையான ஆட்சி. உண்ணாக்கும் அண்ணாக்கும் போல ஒன்றுபட்டுச் சுவைக்கும். இணைப்பை எண்ணின்