உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

325

பொருள் விளக்கமாம். புலி, ஆணம், உண்ணாக்கும் அண்ணாக்கும் அண் - மேல். புலி - புல்லி, தழுவிக்கிடப்பது. எதுகை நோக்கி வறிதே சொல்லாட்சி புரியாது வளமைசெய்தது பாவாணர் திறம். இவ்வாறே உலண்டு' என்பதும் பொருள் செறிந்ததே.

திருக்குறளை 'முப்பால்' என்னும் வழக்கு நாடறிந்தது. அதனை ‘முப்பொருள்' என்பது போற்றத்தக்கது.

செம்புலப் பெயல் நீரை அன்புடை நெஞ்சத்திற்கு உவமை காட்டி உரைத்த புலவர் பெயரையே ‘செம்புலப்பெயல்நீரார்’ எனக்கொண்டது பண்டைத்தமிழகம். அவ்வுவமை நயத்தை விரும்பிய பாவாணர்.

“சிவல்நீர்” எனச்சுருக்கியும் “செம்புலம் பெய்த நீரியல்நேய நீர்மிகு நெஞ்சம்” எனப் பெருக்கியும் உரைக்கிறார்.

66

"தம்மில் இருந்து தமது பாத் துண்டற்றால்”என்னும் திருக்குறளில் தோய்ந்த பாவாணர், "தமது பாத்துணுந் தம்மில் வாழ்வு” எனவும், தம்முடைப் பள்ளியிருந்துணாப் பகிர்ந் துண்டு” எனவும் அமைத்துக் கொள்கிறார். இன்னும் இப்பகுதியில் 'கேளாரும் கேட்ப’ எனவும் ‘சுழன்றும் ஏர்ப்பின்னது' எனவும் வரும் குறள்களைத் தக்காங்கு நினைவுகூருமாறு இயைக்கிறார்.

திருவள்ளுவர் அறம் தோற்பதன்று; என்றும் வென்றே தீரும் என்னும் திண்ணிய கருத்தால் 'திருவள்ளுவ அறம் என்னாமல் 'திருவள்ளுவ வாகை அறம்' என்பது திருக்குறள் மரபுரை கண்ட பாவாணர் பார்வையை வெளிப்படுத்த வல்லது.

நூல் வனப்புகளுள் அம்மை என்பதொன்று; அஃது அடிபெருகாத குறுகிய பாடலாக அமைவது. அவ்வனப்புச் செவ்வனம் அமைந்த நூல் திருக்குறள். இதனைப் பாராட்டும் பாவாணர் திருவள்ளுவரை ‘எம்மை’ என்கிறார். எம் தலைவர்’ என்பது எம்மைப் பொருள். 'எம் குருவர்' ‘எம்கோ’ ‘எம் தலைவர்’ என வள்ளுவரைக்குறிக்கும் இவ் எம்மைக்கு முன்னோடி ‘எம்மடிகள்’ என்னும் சிவப்பிரகாச அடிகள் ஆகலாம்.

ஊழிற் பெருவலி யாவுள என்னும் குறளுக்கு ஒரு சான்று போலத் தம் பார்வையில் பாவாணர் இலக்குவனாரைக் காண்கிறார். பாவேந்தர் எனின், இற்றைநாளில் ‘பாரதிதாசன்' எனச் சொல்லாமலே பலரும் அறிவர். 1959ஆம் ஆண்டிலேயே 'பாவேந்தன் பாரதிதாசன்'என்கிறார் பாவாணர். அன்றியும், நம் புதுவைப் பாவேந்தன் என்கிறார். இன்னும், நாவேந்தரான