உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




326

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

புலவர்க்கு வேலன்றோ நம்புதுவைப் பாவேந்தன் பாரதிதாசன் என்கிறார். அடுக்கடுக்காக உயர்த்தி அரவணைக்கும் அருமை, பாவேந்தரைப் பாவாணர் புரிந்துகொண்ட அருமையின் விளைவே என்க.

66

“கூற்றம் குதித்தாலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு”

என்னும் திருக்குறள் வழிப்பாட்டு ‘நண்ணூற்றைத் தாண்டவரும்’ பெரியாரைக் காண்கிறார், பாவாணர். பெரியார், தாம் பட்ட கல்லடி சொல்லடிகளை வசையாகக் கொள்ளாமல், இசையாகக் கொண்டதையும், சிற்றாற்றில் பேரோடம் செலுத்துவதுபோல் பெரியார் செயலாற்றிய திறத்தையும் எளிய அரிய சொற்களால் சுருக்கத்தால் பெருக்கமாக உரைக்கும் பாவாணர் பாவாணரே என்பதை மெய்ப்பிக்கிறார். 'சாணத்தைக் கொண்டு எறிந்து உளப்புண்படுத்த நினைவார் நினைவார் உள்ளமிலாத் தன்மையை உரைப்பார் போலச் 'சாணக்குண்டு சாணக்குண்டு' என்று ஆளும் ஆட்சி

நெஞ்சுவிட்டகலாதது.

"வீட்டுரிமைக்கு ஆவணம் போல்வது நாட்டுரிமைக்கு வரலாறு” எனப் பல இ இடங்களில் சுட்டுவார் பாவாணர். அதனை நற்கலையின் வென்விழா முதற்பாட்டிற் காட்டுகிறார்.

வெற்றி விழாவை வென்விழா என்பதும் வெற்றியை வெற்றம் என்பதும், புதுப்பொங்கலைப் ‘புதிரி என்பதும் கதிரோனை விண்மணி என்பதும் பூப்பு நீராட்டை மண்ணுதல் மங்கலம் என்பதும், தமிழை முல்லைத்தமிழ் என்பதும் பகுதியில் அமைந்துள்ள நயமிக்க சொல்லாட்சிகளாம்.

ப்

இரங்கல் பகுதியில் பாவாணர் உருக்கம் தெற்றென வெளிப்படுகின்றது. அதேபொழுதில் உலகியல் தெளிவும் பளிச்சிடுகின்றது. இரங்கல் இரங்கலாக அமையாமல் இதற்குத் தீர்வு இன்னது என்னும் வழிகாட்டுதலும் புரிகின்றது. ‘சொல்’ ‘தொடர்’ ‘பொருள்' ஆகியவற்றின் நயங்கள் உணர்வின் ஆழத்தில் இருந்து வருவதால் மிகச் சிறக்கின்றன.

பட்டகாலிலே படுமெனும் பழமொழியை நிைைன கின்றார். திருவரங்க நீலாம்பிகையார் குடும்பத்துப் பட்ட துயர்களெல்லாம் பாவாணர்க்குத் தட்டுப்படுகின்றன. பட்ட அரங்கனார்; பிள்ளைமைப்பட்ட எண்மர்; உண்மை கைப் பட்டது; அவர் பட்டது - ஆயபட்டவைகள் அணிவகுக்கின்றன.