உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

327

அதுபோல், "செல்வமேயெனும் செல்வஞ்சென்றதைச் செல்வி வாயிலாய்”

என்பதிலும் சொன்மீட்சி தவழ்கின்றது.

“புதுவதே யன்றுயிர் போவ தியல்பு”

“அன்னையிற் சிறந்தவர் ஆரும் இன்மையின்

66

99

கூரியல் குன்று மோதான் கோளரி குருளை யேனும்”

என்பவை பழமை வழிப்பட்டவை எனினும் நூற்பா அன்ன அமைதியவை.

செந்தமிழ்ப் புலவன் என்கோ? சிறந்தவா சிரியன் என்கோ? என ஒரு பாடலில் வரும் ஆறு என்கோவும் நம்மை எங்கோ தொடர ஏவுகின்றன. காதல் ஐயத்தில் பிறந்த ‘என்கோ’ சிலம்பில் பிறந்தது என்றால் கலங்கல் ஐயத்தில் பிறக்கின்றது வ் ‘என்கோ’

“மாறனோ ஆரன் தானோ மற்றெனின் சேரர் கோனோ” என ஒருவரை மூவேந்தர்க்கு ஒப்பிடல், ஆறடி வளர்ந்த தோற்றம் கூறல், நீள்மேலாடை வீசுகை முழந்தாள் தோய்தல், ஏற்போல் நிமிர்ந்து செல்லல்’ சல்லல்" என்பன பல்கால் கண்டு பசுமையாக உளத்தில் பதித்துக் கொண்டிருந்த பதிவின் முத்திரை.

உணர்விலாப் புலவரை ஏட்டுப்புலவர் என்பதும் உணர்வுப் புலவரை மானச் செம்மல் என்பதும், பிறரை அச்சுறுத்தும் உடலைச் சூருடல் என்பதும், விரைைைவக் கதுமென என்பதும், செயல் திறவோரைச் சொல்லோவியர்போலச் செயலோவியர் என்பதும், பத்மஸ்ரீயைத்(தா)மரைத் திரு என்பதும் வருந்து பவரைப் பனிப்பவர் என்பதும் அருகிய வழக்குகளையும் எளிமையாக எடுத்தாளுதலுக்குச் சான்றாவன.

“உவப்பவே தலைக்கூடிப்பின் உள்ளவே பிரியுமுன்னர்த் தவப்பல நாளும் ஒக்கத் தனிச்சுவை விருந்தின் ஓம்பி’

என்னும் அடிகள் உவப்பத் தலைக்கூடி என்னும் குறளில் இருந்து கிளர்ந்து மேலேறி நிற்பதாம் சிறப்பினது.

“பெண்ணினற்றுணை பிறிதொன் றின்மை

99

என்பது அழுந்திய பட்டறிவு. “கணவன் கண்முனே கண்ணை மூடுதலை", நன்மனைவி விரும்புதலை உரைத்தல் தமிழ்ப் பெண்டிர் தகைமையுரைப்பு. துணையற்ற காலைத்

“தீந்