உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




328

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

தமிழ்த்துணையே துணையெனக் கோடல்" வேண்டும் என்பது அறிவறிந்து கூறும் மருத்துவக்கூறு.

“கொல்வ கையெனும் குறிப்பி லாமையாற்

சொல்வி னைக்குமைச் சூழ்ந்த மர்த்தினேன்”

என்பது தாமுறும் கையறவு; 'யானும் கையறவுக்குத் துணையாகி நின்றேனோ' என்னும் கனிவுச் சுரப்பின் வெளியீடு.

'சொல்வினை’ யாவது சொல்லாராய்ச்சித் துறையாம் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்துறை.

66

"இருந்தநாள் ஒன்றும் ஈயா

திறந்தபின் இரங்கல் கூறல்

வருந்தவே தானிந் நாட்டு

வழக்கமாய்ப் போயிற் றந்தோ”

என்பது நூற்றுக்கு நூறு செவ்விய முடிவு என்பதை மறுக்கச் சான்று உண்டோ? பாவாணரே க்கூற்றுக்கு விலக்குப் பெற்றாரல்லரே!

நூல் வெளியீட்டுக்கு உதவி பற்றியது இந்நன்றிப் பகுதி என்க. நூல் வெளியீட்டுக்குத் தனிப்படச் செய்த உதவி., குழுவாக அமைந்து செய்த உதவி, மணிவிழா வெடுத்துப் பணந் தண்டித் தந்த உதவி, நூல்களை அச்சிட்டு மெய்ப்புப் பார்த்த உதவி என்பவற்றுக்கு எழுந்த நன்றிப் பாடல்களே இவை.

தமிழ் இலக்கியவரலாறு, வடமொழி வரலாறு, மண்ணில் விண், தமிழர் மதம், திருக்குறள் மரபுரை என்பவை இவ் வகையால் வெளிப்பட்டவையாம். செட்டிகுளம் பாவாணர் நூல் வெளியீட்டுக் குழு, செங்காட்டுப் பட்டி பாவாணர் நூல் வெளியீட்டுக்குழு, நெய்வேலி பாவாணர் தமிழ்க் குடும்பம், மதுரை பாவாணர் மணிவிழாக் குழு என்பவை சுட்டப்படும் குழுக்கள்.

சிங்கபுரி (சிங்கப்பூர்) அன்பர்கள் சிறந்த கொடை இவண் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கொடுத்த காடை யாளர் பெயர்களை நன்றிப் பகுதியில் கண்டு கொள்க. சிங்கபுரி அன்பர் பதினெண்மரைப் பதினாறடி அகவலுள் செறித்து வைத்துளார் பாவாணர். இந்நன்றிப் பாடற்பகுதியில் இடம்பெறாத நன்கொடையாளர் பட்டியும் தனியே உண்டு. இது பாடல் தொகுப்பு ஆகலின் இடம்பெற்றில.