உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

66

329

"மொழிநூல் மாணவன்” எனத் தம்மைக் குறிக்கிறார் பாவாணர். அடுத்த இருசீர்களிலேயே முதுதேவ நேயன்" என முதுமையும் பெயரும் முறையே தொடர அமைந்து மின்னுகிறார்; ஏடது கைவிடாது ஏந்திய கொள்கையர் முது மாணவர் தாமே !

அரசு தன்கடன் ஆற்றவில்லை; பல்கலைக் கழகம் பரிந்து உதவவில்லை. ஆந்நிலையில் ஆர்வலர் முந்துவந்து உதவினர். ஆகலின், “ஆளும் அரசும் அமைபல்கலைக்கழகமும்” நீள்கையற உதவினராம்.

“கோடிக் கணக்கில் குவித்துத் தமிழ்பேணாப் பேடிக் கயவர் பெயர்கருக்க” உதவினராம்.

“பல்லா யிரம்வேலிப் பண்ணைப் பெருமடங்கள் எல்லாம் இருள” உதவினராம்.

கையற, கருக்க, இருள நேராதிருந்தால் நிலைமை எவ் வளவோ மாறியிருக்குமே? அவர்கள், தாம் கண்டு கொள்ளக் கூடாது. என்றே கண்ணை மூடிக் கொண்டவர்கள் அல்லரோ?

திருவிளையாடலில் தருமிக்குப் பொற்கிழியளித்த செய்தி

யுண்டு. அதனைத் தமக்களித்த குறிக்கிறார் பாவாணர்.

கொடைவிஞ்சியதெனக்

“தருமிக்குத் தந்தது தாராத் தமிழின்

பெருமை வரலாறு பெற்று

காடையை எண்ணவும்

என்பது அது. மேலும்., சடை யன் கொடை அதனை விஞ்சியதாகக் கொள்ளவும் ஏவுகின்றது.

“பணத்திற்கு மூன்றுபடிவிற்ற காலை பரிந்துகம்பன் உணத்தந்த வள்ளல் சடையன் உதவிய தோவியப்போ கிணற்றிற்குட் கேணியும் ஊறாநாள் முத்துகிருட்டிணன்தான் குணத்திற்கீ டின்றிக் கொடுத்தனன் யாவும் குறிப்பறவே”

பிசிராந்தையார் நட்பு, கிளியீடு (பாரி பறம்பில் கிளிகள் தொகுத்த கதிர்), கார்பணி கற்பு (மழையையும் ஏவல் கேட்கச் செய்யும் கற்புடைமை) என்பவற்றை ஆங்காங்கு ஆள்கிறார்.)

செட்டிகுளம், செந்தமிழ் அன்னை என்னும் பெயர்களை நினைக்கவும் சீரிய கற்பனையில் திளைக்கிறார். அதனால், “செந்தமிழ் அன்னை செழியன் தமிழ்நாடும் வெந்தழல் ஆரிய வெம்மையால் -வந்தே