உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




330

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

குளிர்ச்சிபெறத் தோழியொடு கூடி மகிழ்ந்து

குளிப்பது செட்டி குளம்”

என்றார். அச் செட்டிகுளம் போலவே செங்காட்டுப் பட்டியிலும் பாவாணர் நூல்வெளியீட்டுக்குழு உண்டாகியமையால்,

“செட்டிகுளத் திற்குளித்த செந்தமிழ்த்தாய் செங்காட்டுப்

என்றார்.

பட்டியிலே வந்து பருகப்பால் -அட்டியது

போல்வதே மீண்டும் பொலிந்தெழுந்த பாவாணர் நூல்வெளி யீட்டுக் குழு”

சிங்கபுரியில் ஆட்சிமொழிகளுள் தமிழ் ஒன்றாக இருத் தலை அறிந்து மகிழும் பாவாணர்.

"இலங்கரச மும்மொழியுள் ஒண்டமிழும் ஒன்றாம் இலங்கையிலும் இல்லாத ஏண்”

என்று பாராட்டுகிறார். நடுவண் ஆட்சி மொழிகளுள் ஒன்றாகத் தமிழும் இல்லையே என்னும் எண்ணத்தின் வெளிப்பாடு இது.

ஐந்தாவதாம் ஐந்தகம் பத்தே பாடல்களையுடையது. செந் தமிழ்ச் செல்வி மாதிகை பற்றியது முன்னது. அது போற்றத் தக்க பொற்பேழை என்றும், அது தமிழ வாகைப் போர் செய்து பாடாண் பாடுவது என்றும், இ வ் வவைந் தகத்துப் பாராட்டுகின்றார். அடுத்த ஐந்தகம் திருக்குறளின் சிறப்புப் பற்றியது. வள்ளுவர் வகுத்த அறம் நடுவறம் என நயக்கின்றார்.

பதிகம் ஒன்பதுண்மை அறிந்துள்ளோம்; அஃதாறாம் பகுதி. உலக முழுமைக்கும் ஒத்த மறைநூல் திருக்குறள் என்றும், ஊரும் பிறப்பும் உறுதொழிலும் உற்றோரும் பேரும் தெரியாப் பெரும்புலவர் திருவள்ளுவர் என்றும், ஒழுக்கம் உயர்குலம்; ஒன்றே பிறப்பாம்; இழுக்கம் இழிகுலம் என்ப தென்றும், பொய்மையும் வாய்மை இடத்த என்னும் பொய்யா மொழி என்றும், இல்லறத்தாலும் இறையடி எய்தலாம் என்பதென்றும், அது புரட்டை வாரிய சூறாவளி என்றும், பல்லுரை கண்டும், முடிவாகக் கண்டார் இலர் என்றும் அது மாமலைக்குச் செல்லாமல் யாரகத்தும் அமர்ந்துதவும் அரு மருந்து என்றும் தமிழர்க்கு உய்வைத் தந்தது என்றும் பொது மறைப் பதிகம் புகல்கின்றது.