உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

331

செயற்கரிய செய்வார் பெரியர் என்பதற்கு எடுத்துக் காட்டு பெரியார் என்றும், தமிழினத்திற்கெனவே உழைக்க வந்தவர் அவர் என்றும், எதிர்ப்புக் கஞ்சாது தாங்கும் சூர வாழ்க்கையர் என்றும், இந்தியெதிர்ப்பில் தலைசிறந்தவரும், குடி செய்வாராய் மடி செய்யாது மானங்கருதாது தொண்டு பூண்டவரும் பெரியாரே என்றும், கண்மூடி வழக்கங்கள் மண் மூடிப்போக உழைப்பவரும்., பட்டபடிப்புகள் பயனில் குப்பையாக இருப்பதை மெய்ப்பிப்பவரும் அவரே என்றும், பெரியார்தன்மான இயக்கப் பதிகத்துப் பாடுகிறார்.

சீரிய கொள்கைச் சிதம்பரப் பதிகம் வ.உ.சி.யைப் பற்றியதாம். "நாட்டுப்பற்றால் முன்னே நாய்படாப்பாடுபட்ட ஒட்டப்பிடார ஒளிர்மறவன்” எனப்பதிகத்தைத் தொடங்குகிறார். “மாடுபோற் செக்கிழுத்து, மட்டிபோற் கல்லுடைத்து, வேடுபோற்கேடாய் டையுடுத்துப்- பாடுபட்டோன், கேழ்வரகுக் கூழுண்டு கீழ் விலங்கிற் கீழ்விலங்கில், தாழ்வுறுதற்கே சிதம்பரம்” என வெதும்புகிறார். அவர்தம் நாட்டுத் தொண்டு, மொழித் தொண்டு, நன்றிமறவாமை என்பவற்றை விரிக்கிறா.ர்.

மறைமலையடிகள் பல்துறையாற்றற் பதிகத்தில் அவரைப் பேராசிரியர், பெரும்புலவர், பாவலர், ஆராய்ச்சியாளர், மும்மொழிப்புலவர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், பல்கலைச் செல்வர், தனித்தமிழ்த் தந்தையார் எனப்பதின்வகையிற் காண்கிறார்.

66

மூவா யிரமாண்டு மோதும் வடமொழியாற் சாவாந் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார்”

- என முடிக்கிறார்.

பாரதிதாசன் பண்பாட்டுப் பதிகத்தில்,

66

ஆனை நடையும் அரிமாப் பெருமிதமும்

கோனையும் சாடிக் குமுறுரையும் - தானையே தாக்கினும் அஞ்சாத் தறுகண்ணும் மேலாடைச் சேக்கையும் பாரதிதா சன்’

என்பது அருமையான ஓவியக் காட்சி, அவர்தம் பாடலைத் தெளிதேனில் தீன்கலந்த தெண்ணீர்ப் பதம்போல்” வது

66