உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




332

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

என்கிறார் (185) இக்குறிப்பு ‘குலோப்சாமூன் என்பதாகலாம்! "பாலை நிலத்தில் பழம்படு பன்மரப்பைஞ் சோலையே பாரதி தாசன் என்கிறார்.

சேலம் நகராண்மைக் கல்லூரி முதல்வர் இராமசாமிக் கவுண்டர். பாவாணர் வாழ்வில் பசுஞ்சோலை எனத்தக்க காலம் இராமசாமியார் அரவணைப்பில் அவர் இருந்த பன்னீராண்டுக் காலமே .

66

தமிழ்ப் பற்றே வடிவெடுத்தாற் போன்றவரும், தமிழ்ப் பண்பாட்டில் தலைசிறந்தவரும் என்மொழி நூலாராய்ச்சி முற்றுதற்கு ஒரு பெருந்துணையாய் இருந்தவரும், ஒப்புயர் வற்ற முதல்வருமான பேராசிரியர் அ.இராமசாமிக் கவுண்டர் எனத்தம் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தில் பாராட்டுவார் பாவாணர்.

“சேலங்கல் லூரி சிறந்திராம சாமியின்றேல் ஞாலம் பரவுதமிழ் ஆராய்ச்சி - நூலியற்றும்

தேவநே யன்எங்கேதென்மொழித் தொண்டெங்கே பாவுதமிழ் மீட்பெங்கே பார்”

என்னும் பாடலால் பாவாணர் உள்ளகம் தெள்ளென விளங்கும்.

சிங்கபுரி வணிகவியற் கல்லூரி முதல்வர் கோவலங் கண்ணனார். கோபாலகிருட்டிணனாம் அவர் தனித்தமிழ்ப் பற்றாலும் பாவாணர் தொடர்பாலும் கோவலங்கண்ணராயவர். அவர்தம் நயத்தகு நயங்களை உன்னிப் பண்டை முறையில் ‘பாடாண்பதிகம்' பாடினார்.

"ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்

அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று”

என்பது பாடாண் இலக்கணம் (புறப்பொருள் வெண்பாமாலை

189).

66

அறிவொழுகுகண்; அமர்தமிழ்நோக்கு; செழிம்பு; கோவீறு நெஞ்சு: பொற்கோல வளருடம்பு" இவை கோவலங் கண்ணர்: என்கிறார். “தமிழே கருதித் தகுந்தாரைத் தள்ளா நமர்”எனக் கோவலங்கண்ணர் பெருநோக்கைக் குறிக்கிறார். "முந்திப் பொருளளித்தார், பிந்திப் புகழ்ந்துரைத்தேன்” எனப் புகழ் கருதாப் புகழ்க்கொடையைப் புரிந்து பாடுகிற

பாவாணர்.