உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

333

எட்டாம் பதிகம் வெள்ளச் சேத விளரிப்பதிகம். 'விளரி’ என்பது இரங்கற்பண். 'விளரியுறுதருந்தீந் தொடை' என்பது புறநானூறு (260). வெள்ளத்தால் உண்டாகிய அழிபாட்டுக்கு வருந்திப் பாடுகின்றாராகலின் இப்பெயரிட்டார்.

"ஆருயிர் அனைய என்றன் அன்பனை இழந்தேன் என்பார் கார்பணி கற்பின் செல்வக் கண்ணகி இழந்தேன் என்பார் சீரியஅறிவு வாய்ந்த சேயரை இழந்தேன் என்பார் ஊரினில் உள்ள எல்லா உறவையும் இழந்தேன் என்பார்

என்றும்,

“நீர்மிகின் சிறையு மில்லை நீளியின் வலியு மில்லை

கார்மிகின் உறையுளில்லை கனல்மிகின் அணைப்பு மில்லை பார்மிகும் பரிசொன்றில்லை பரவெளி மனை யெழுப்பிக் கூர்மதிக் குடும்பத் திட்டங் கொண்டினி தொழுகுவோமே'

என்றும் வரும் பாடல்களின் எளிமையும் உணர்வும் ‘விளரி’ யை வெளிப்படச் செய்யும். இது நாகைப் பகுதியைத் தாக்கிய கடும்புயல் வெள்ள அழிபாட்டைப் பற்றியது. ஒலிக்குறிப்பை எதுகையாக்கி உணர்வை உருக்குவதைப் பத்தாம் பாடலிற்

காண்க.

இறுதிப் பதிகம் படைமற வாகை என்பது.

“ஊனரத்தம் துளியு டம்பில் உள்ள வரையும் பொருமினே வான வர்பூச் சிந்தி வாழ்த்த வாகை சூடி யாடுவீர்"

என்பதில் (6) தலைப்புச் செய்தி சுட்டப்படுகின்றது. வங்கப்போர் வெற்றி பற்றியது து. இளைதாக முள்மரம் கொல்லல்’ எலிப்பகை நாகம் உயிர்ப்பக்கெடும், 'நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்' என்னும் குறள்களும் பழமொழிகளும், வரலாற்றுக் குறிப்புகளும் இப்பதிகத்தில் டம் பெற்றுள.

வெற்றி மாளிகையில் போர்ப்பாடகராகப் பணியாற்ற வேண்டும் என்று ஒரு காலத்தில் அவாவியவர் பாவாணர் என்பது இவண் எண்ணத்தக்கது.

வரலாறு என்னும் ஏழாம் பகுதியில் சாமிநாதையர் தமிழ்த் தொண்டு என்னும் பகுதி முதற்கண் உள்ளது. அதில் “கொலம்பசு முதலோர் கொடுங்கடலோடி, நிலம்பல கண்டிலராயினும் நீங்காப்., பின்னோர் அவற்றைப் பின்னே காண்பர்” ஆனால்,