உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




334

66

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

சாமிநாதையன் சார்ந்திலனாயின், இற்றைத் தொன்னூல் என்னாகியிருக்குமோ?” என்னும் அரிய செய்தியும், "விறகுத் தலையன் முறையில்” ஏடு கொண்டு தொகுத்து வெளியிட்ட பெரிய செய்தியும் இடரிலா நடையில் தடையறச் செல்கிறது.

அவ்வாறே சாமிநாதர் மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர்க்கு உதவிய வெங்களப்ப நாயகர் பற்றி எழுதிய செய்தியைக் கொண்டு இயற்றப்பட்டதே வழிமுறைப்பண்பு (வழிமுறை - பரம்பரை).

வெங்களப்ப நாயகர் கொடையில் வாழும் செய்தியை மிதிலைப் பட்டியார் உரைக்க, வண்டியோட்டியாக இருந்த நாயகர் வழிமுறையார் வாடகையும் கொள்ளாது உணவும் பெறாது விடைபெற்றபோது என் எனக் கவிராயர் வினவக் "கொடுத்ததை வாங்கும் குணமெமக்கில்லை” என்று கூறிச் சென்ற அருமைச் செய்தி அது. இவ்விரண்டும் மாணவர் கட்டுரைப் பயிற்சிக் கென வரையப்பட்டவை எனினும் பொன் போற்போற்றத் தக்க புகழ்வாய்ந்தவையாயின.

எட்டாம் பகுதியாம் கதையில் முன்னதில் பள்ளிக் கணக்கு புள்ளிக் குதவாது என்பது. உலகியல் அறியார் அறிவு அறிவாகாது என்பதைப் பற்றியது அது. இலக்கணம், தருக்கம், இசை, கணியம் (சோதிடம்) மருத்துவம் வல்ல ஐவர் சமையல் செய்யப் புகுந்த கதை இது. "சொல்லிய கதைதான் நம்பும் தோரணையற்ற தேனும்; பள்ளியின் கல்வியெல்லாம் பயன்படா புள்ளிக் கென்பது” தெளிதற்கு உதவும் என்று முடிக்கிறார்.

நன்றியுள்ள சேவகன் என்னும் கதை மேலை நாட்டுக் கதையின் செய்யுளாக்கம்.. ஒரு செல்வன் ஒரிடங்காணுதற்கு நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் சென்றான். வழியில் ஓநாய்கள் வளைக்க அவற்றில் இருந்து தப்புவதற்கு ஒரு குதிரையை அவிழ்த்து விடுத்தான் வண்டியோட்டி. அதனைத் தின்று முடித்து மேலும் ஓநாய்கள் தொடர ஒவ்வொன்றாக நான்கு குதிரைகளையும் அவிழ்த்து விடுத்துத் தன்னையும் இரையாக்கித் தலைவனைத் தப்பிச் செல்ல விடுகிறான். இக்கதை மாணவர் உரைநடை ஆக்கப்பயிற்சிக்காக வரையப்பட்டதாகும். ஒன்பதாம் பகுதி பலவகைப்பாடல்களைக் கொண்டது. ‘தமிழினத்தீரே; தமிழினத்தீரே” என விளித்துத் தமிழின உயர்வும், அதன் தாழ்வு நிலையும், அந்நிலை மாறுதற்காம் வழியும், திருக்குறட் சிறப்பும் விரித்து முதலகவலில் ஓதப்படுகின்றன.

66