உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

335

திருப்போராட்டக் காலத்தில் எழுந்த 'திருப்பாட்டும், இருமொழிக் கொள்கைப் பாட்டும் படைகொண்டார் மனம் நன்றூக்காமைப்பாட்டும், நீர்க்குமிழி நிலைய வாழ்க்கைப் பாட்டும், தமிழன் தாழ்நிலைப்பாட்டும், வள்ளுவரைப் பற்றிய இசைப்பாட்டும், கும்மியடி பெண்ணே கும்மியடி என கும்மிப்பாட்டும், எஞ்சிய போலிகைப் பாடல்களும் இ பகுதியில் இடம்பெற்றுள

ரு

“தமிழ் ஆட்சி மொழியாதல் வேண்டும்; ஆங்கிலம் ஆட்சி மொழியாதல் கேடு" எனக்கும்மிப்பாட்டில் பாடுகிறார். தலையாய தமிழர் எனவரும் இறுதிப் பாட்டு “தனித்தமிழை விரும்புவாரே தலையாய தமிழர்” என்கிறார். சங்கநிதி பதும நிதி' என்னும் அப்பரடிகன் தாண்டகப் போலிகை அது படை கொண்டார் மனம் பற்றிய பாட்டு நெஞ்சை நெகிழச்செய்வது.

ம்

இறுதிப்பகுதியில் வண்ணனை நூலின் வழுவியல், வட மொழி வரலாறு என்பவற்றின் முடிநிலைப் பாடல்கள் இடம் பெற்றுள. மொழியியல் சிந்தனை மிக்கவை. வழிபாட்டு மொழி தமிழே என்பதொரு பாட்டு. வான்வாழி என்பது நிறைவுப் பாட்டு. திருக்குறட்கு வடசொல் தேவையின்மையை நிலைநாட்டு மாறு பொருள் கெடாவாறு வடசொல்லமைந்த குறள்களை மாற்றியமைத்துக் காட்டிய பாடல்கள் திருக்குறள் மரபுரையில் 23 இடம் பெற்றுள. அவை ஆய்வு வகையில் நிலைநாட்டுதற் கெனக் காட்டிய சொன்மாற்றாகலின் பாட்டோ போலிகைப் பாட்டோ, ஆகாமையால் அவை இணைத்துக் காட்டப் பட்டில.

இத்தொகை யாக்கத்தின் பின்னர்க் கிடைத்த பாடல்கள் 5 திருமண வாழ்த்து 2. பொங்கல் வாழ்த்து 2. பாணர் கைவழி என்னும் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் 1. ஆக 5 இவற்றுள் வண்பா 3. அகவல் 1. கலித்தாழிசை 1. இவை இணைப்பாக அமைக்கப்பட்டவை.

பாவாணர் மடல்கள் ல்கள் வெளியீட்டு வகையால் கிடைத்த வருவாய் கொண்டு பாவாணர் பாடல்கள் வெளிவருகின்றது. ஆதலால் பாவாணர் மடல்களுக்கு உதவிய புலமைத் தோன்றல்கள் திரு. தமிழ்நேயர், செம்பியர் என்பார்க்கும், இப்பாடல்களை வெளியிட்ட நூல்கள் இதழ்கள் ஆகியவற்றுக்கும், தம்மிடம் இருந்த பாடல்கள் தமிழ் வளம் ஆகும் வகையில் உதவிய அன்பர்களுக்கும் நன்றியன்.