உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

முந்தைக்கொடை முறை

பாவாணர் என்னும் பனிமலையின் பாடல்கள் நாவாணர் துய்க்கும் நறுந்தேனாம் - காவாணர் செந்தமிழ் நேயரும் செம்பியரும் சேர்ந்தளித்த முந்தைக் கொடையின் முறை.

விற்ற தொகையும் விரும்புகொடை'யென்று சொற்றநம் பாவாணர் சொல்போலப் - பெற்ற மடல்தொகையால் பாவாணர் மாண்பாடல் நூலை உடன்பதிக்க வாய்த்த துளம்.

நூல்வாங்கும் உள்ளத்தை நூற்றுவரில் ஓரொருவர் பால்வாய்க்கப் பார்ப்பினும் பாற்பெருக்காம் - மேல்வாய்க்கும் நூலுக்கு நல்லகொடை நூல்விற்றல் என்பதுதான் ஆலுக்கு வீழ்தென்னல் ஆம்.

337