உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1.

பாவாணர் பாடல்கள்

1. பாயிரம்

கடவுள் வாழ்த்து

குமரி நிலத்தெழுந்த கோமொழி யேனும்

தமிழர் அடிமைத் தனத்தால் - சிமிழ்த்திருக்கும்

ஆரிய ஞாட்பின் அருந்தமிழை மீட்கவொரு சீரிய மீட்பன் துணை.

-இ.த.க.

கோமொழி தலைமையான மொழி; சிமிழ்த்திருக்கும் கட்டுண்டிருக்கும்; ஞாட்பு போர்; மீட்பன் மீட்பாளன். இறைவன்.

2. எண்ணிற்கு மெட்டா இடங்காலந் தேங்காவி

4.

கண்ணிற்கோ எட்டுங் கனப்பொருளாம் - வண்ணிக்கக் கூடாமல் அன்றோ குறித்தார் கடவுளென

நாடாமல் உண்டென நம்பு.

3. மறைமலை யடிகளும் மாமதி யழகரும் கறையுறும் இந்தியைக் கடிந்தும் தொண்டர்பின் சிறையுழந் தின்னுயிர் சிந்தியும் வடவர்தாம் இறையுமெ ணாதிவண் இந்தியைப் புகுத்தினர். இந்நில வரலாறும் இன்றமிழ்ப் பெருமையும் என்னுமே யறியாமல் இறைமை தாங்கிய தன்னல வடிவெனும் தமிழப் போலியர் கன்னலந் தமிழையும் காட்டிக் கொடுத்தனர். தமிழ லாதுயிர் தமிழனுக் கின்மையின் தமிழன் தன்னிலம் தன்னுயிர் தாங்கவே இமையுந், தாழ்விலா தியன்ற யாவையும் அமையச் செய்குவிர் அயன்மொழி யொழியவே.

5.

-த.ம.