உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




346

பார்மிசை நீடு வாழியர்

ஈரறி மகவர் இன்பந் திளைத்தே.

பாவாணர் கடிதங்கள் பாடல்கள்

-புலவர் இளங்குமரனாருக்கு 25.5.79

தமிழ்மறை - திருக்குறள்; செம்புலம் பெய்தநீரியல் நேயம் என்பது “செம்புலப் பெயல்நீர்போல அன்புடைநெஞ்சம் தாம் கலந்தனவே” என்னும் குறுந்தொகைவழியது. நீர் ஈரறிமகவர். அறிவறிந்த மக்கள் இருவர்.

மங்கலத்திற்கு இலட்சுமி நாராயண கண்மணியர்

திருமண வாழ்த்து

30. கண்மணி லட்சுமி நாரா யணர்காதல்

விண்மணி யேபோல் விளங்கியொன்றாய் - ஒண்மணி மக்கள் தகவுணர்த்த மாநிலத்து நீடியரோ தொக்க நலமெலாந் தோய்ந்து.

-

வளம்;

- 31.5.79 சு. பொன்னுச்சாமி

எல் - கதிரோன்; தொக்க - நிரம்பிய.

திருவளர் சங்கரி மங்கலநீராட்டு விழா

31. எங்கணும் தங்கும் இறைவன் திருவருளால் மங்கையாம் சங்கரி மண்ணுநீர் - மங்கலந்தான் பொங்கபின் பெற்றோர் புகலும் பெருமகனின் துங்கநல் வாழ்க்கைத் துணை.

-

-

- 12.8.80 பாவலர் இ. முத்துராமலிங்கம்

மண்ணு மங்கலம் பூப்பு நீராட்டு; பொங்க - பொலிக; புகலும் - சொல்லும்; துங்கம் - உயர்வு.

மக்கள் வாழ்த்து

32. தேவ மொழியேனும் தெட்டை நீக்கியே ஏவருந் தமிழ் எமது மொழியென மேவி வாழியர் மேலை மறந்தபின்

தாவில் நல்லிசைத் தமிழம் ஓங்கவே.