உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




352

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

சிவஞான முனிவர்

நூல் நிலையத்திற்கு வாழ்த்து

53. நெல்லைத் திருநகர் நீள்கிழக்குத் தேர்மறுகில் முல்லைத் தமிழின் முதிர்புலவர் - ஒல்லையில் மொய்சிவ ஞான முனிவர்கோன் நூல்நிலையம் எய்துக நீடி இனிது

-

செ.செ. 40: 297

மறைமலை மன்றத்திற்கு வாழ்த்து

54. குமரி மலைப்பிறந்த கோமொழி - வாழி திமிர மறை மலைசீர் வாழி - அமரும்

மறைமலை மன்ற மதன்வாழி வாழி மறைமலை யச்சு மனை.

இலண்டன் தமிழ்ச் சங்க

ஆண்டுமலர் வாழ்த்து-1976

தமிழர்வ.

55. உலண்டின் கூடும் உயர்ந்தோர் உவக்கும் உடைக்குதவும் இலண்டன் தமிழ்ச்சங் கமதின் இவ்வாண் டியல்மலரே இலொண்டுங் குடிபோ லிங்கிலாந் தில்தமிழ் இருந்திடினும் சொலண்டும் ஆங்கில இனமுத லெனுமெய் சொலித்திடவே.

மணிவாசகர் நூலகர் மன்றம்

56. மணிவா சகர்நூ லகமன்றம் நீட

மணிவா சகநூல்கள் மன்னி - அணியோசைச் சிற்றம் பலமுஞ் சிறந்தபே ரம்பலமும்

மற்றம் பலமாய் மலிந்து.

முதன்மொழி வாழ்த்துப்பா

57. உலகத் தமிழ்க்கழகம் ஒன்றையே பற்றி

இலகப் பரவும் இயம்பி - நீலவுகவே