உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

46. சிவநெறிக் கொண்முடிபும் செந்தமிழும் போற்றும் உவமனிலா நூற்பதிப்பில் ஊன்றி - நிவந்தோங்கிப்

பொன்விழா வைத்தமிழ்ப் பொத்தகஞ்செய் நற்கலையின் வென்விழா வென்றே விளம்பு.

47. நாடும் மொழியும் நலஞ்செய்பல் வேறறிஞர் பாடும் அரசும் பகர்நூல்கள் - கேடின்றிச் செந்தமிழ் ஆங்கிலம் சேரவிலை கொள்ளுமிடம் அந்தமிழ் அப்பரச்ச கம்.

48. ஆயிரத்தெண் ணூறாண்டின் முன்னைத் தமிழரெனும் நேயமிக்க நூற்கறு நூறுரூபா - சேயொருத்தர் பெய்தார்வே றெங்கும் பெறலின் றெனமயங்கி நொய்தாங் கழகவிலை நோக்கு.

49. பாட்டும் உரையும் பதவிதரு நற்சான்றும் காட்டும் படங்கடிதம் கையெழுத்தும் - கூட்டிப் புலவர் வரலாற்றைப் போற்றுங் கலையில் வலவன்யார் சுப்பையாவல் லால்.

50. வெண்டாளில் முத்துப்போல் வேண்டும் பலவடிவில் பண்டார் தமிழ்நூல் பதிப்பித்தார் -கண்டாரின்

கண்ணைக் கவரும் கவின்கட் டடஞ்செய்தார் எண்ணில் பிறர்வே றெவர்.

51. சைவசித் தாந்தநூல் சார்பதிப்ப கம்வாழி தெய்வத் தமிழ்ச்செந் திறம்வாழி - கைவந்த ஆட்சிமே லாளன் அருந்திறலோன் சுப்பையா மாட்சியில் வாழி மழை!

351

-கழகப் பொன்விழாமலர்.

சை. சி. கழகத்திற்கு வாழ்த்து

52. சைவசித் தாந்தநூல் சார்பதிப்ப கம்வாழி தெய்வத் திருவள் ளுவம்வாழி - செய்வெற்றச் சுப்பையா வாழி சொரிமுகில் நீடுழி

தப்பாது வாழி தமிழ்.

செய் - செயல். வெற்றம் - வெற்றி.

என்தமிழ்த் தொண்டு இயன்றது எங்ஙனம்? -

-

செ.செ. 444: 220