உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




350

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

முப்பா னைந்தாண் டொப்புர வாற்றி இல்லாண்மை யானே நல்லாண்மை பூண்டு முதுகுடி யுயர்த்தும் முக்குலச் செம்மல் தன்னலங் கருதா மன்னலக் குருசில் பேர்புகழ் வேண்டாப் பெரும்புக ழாளன் மணிவிழாக் கொள்ளும் பணிவிழா நல்லோன்

ஆண்டி யப்பத் தேவர் வாழி

வேண்டியாங் கெய்தி விழுமிய நெடிதே

உலகத் தமிழ்க் கழக உறுப்பினர்க்குப் பொங்கல் வாழ்த்து

44. தகைசால் உலகத் தமிழ்க்கழ கத்தீர் நகைசேர் முகத்தொடு நலமாய் வாழ்க! புத்தாண்டாகும் பொங்கல் நன்னாள்! கொத்தாம் மஞ்சட் கொழுங்கிழங்கு கமழ்க! வெண்ணெலும் கரும்பும் வீடுதொறும் பொலிக! பாலொடு சோறும் பாற்படப் பொங்குக! புத்தாடை யணிந்து புதிரியுண்க!

இல்லார் மகிழ்க! இயன்றவை ஈக!

மறைமலை யடிகள் நிறைமொழி வள்ளுவர் மலர்முகப் படங்கள் மனைதொறும் நாற்றுக! தமிழ்ப்பெயர் தாங்குக! தனித்தமிழ் பேசுக தென்மொழி படிக்க! தீந்தமிழ் பொழிக! உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி இலகு தமிழெனல் எதிர்நோக்கி இனியே

நற்கலையில் வென்விழா

-Q5. OLDIT. 7. 9. 48

45. வீட்டுரிமைக் காவணம் வேண்டும் வரலாறு நாட்டுரிமைக் காகும் நவையின்றேல் - ஏட்டுரிமை பெற்றார் திருவரங்கம் பின்னிளவல் சுப்பையா உற்றார் வெளியிட வோர்ந்து.