உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




354

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

62. தனித்தமிழ் இயக்கினைத் தாங்குவார் தம்மையே

தனிப்பட்ட வளைத்தனன் தகையில் கூற்றுவன் இனித்தமிழ் என்னிலை எய்து மோவெனப் பனிப்பவர் தீக்குறி பார்ப்ப தற்கிதோ!

63. புதுவதே யன்றுயிர் போவ தியல்பென முதுவரும் முன்னரே மொழிந்த துண்மையால் இதுவரை இருந்ததற் கிறையை யேத்தியே கதுமென யாஞ்செயும் கடமை முற்றுவோம்.

திருவாட்டி வ. சுந்தரத்தம்மையார்க்கு - இரங்கலுரை

64. இந்நிலை எண்பானால் ஏற்ற மாயினும் அன்னையிற் சிறந்தவர் ஆரும் இன்மையின் எந்நிலை இறப்பினும் ஈன்ற தாய்மகன் துன்னுறு துயர்பிறர் துய்க்க வல்லரோ.

-

செ. செ. 27: 81

நாவலர் பாரதியார் மறைவுக்கு இரங்கல்

65. காமு றத்தமிழ் காத்தபண் டாரகன் சோம சுந்தர பாரதி சூருடல்

ஈம மெய்தினும் இந்நிலம் நிற்பனே ஏம நல்லுரை ஏறென வென்றுமே

ஒளவை தி.க. சண்முகனார்க்கு இரங்கற் பாக்கள்

என் செய்வோம் !

. செ. செ. 34. 205

66. இலக்கியமும் வரலாறும் எல்லாரும் இன்பமிகத் துலக்கமுடன் கண்டறிந்து தொல்பெரியார் வாழ்ந்தபொது நலக்குறிக்கோள் கொண்டொழுக நடித்தகலைச் சண்முகனார் கலக்கமுற நமைப்பிரிந்த கடுந்துயருக் கென்செய்வோம்! 67. செவ்வை நடிப் புடனிசையும் சேர்தமிழ ரில்லையெனும் கவ்வையற எவ்வகையும் களங்கொண்ட முத்தமிழர்