உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

அவ்வையடைச் சண்முகனார் அரியசெய லோவியனார் எவ்வமுற நமைப்பிரிந்தார் இணையில்லார் என்செய்வோம். 68. தமிழ்நாடு தமிழாட்சி தான்பெறவே காலமெலாம் தமிழோடு தமிழாகித் தமிழரசுத் தூணாகி

நிமிரோசை மரைத்திருவாம் நெடுமொழிசேர் சண்முகனார் அமிழ்தான தமிழ்கவல அகன்றுவிட்டார் என்செய்வோம்! பண்டாரகர் சி. இலக்குவனார் மறைவுபற்றி இரங்கல் பதிகம்

69. முந்திவா ளோடு மூத்த முதுகுடிப் பிறந்து கல்வி தந்தையர் தமிழ்ப்பா லூட்டத் தறுகணர் புலமை முற்றி இந்தியை எதிர்க்கு முன்பே ஏனைய மொழிக் கலப்பைச் சிந்திய தமிழ்வ ளர்ப்புச் செயலிலக் குவனார்க் காணோம். 70. நீரணை திருவை யாற்று நேரிரு மொழிக்கல் லூரி

71.

ஆரியர் முதல்வ ராகி அருந்தமிழ் பழித்த காலைச் சீரிதின் மறுத்து வந்தார் செறிந்திலக் குவனார் தாமே கூரியல் குன்று மோதான் கோளரி குருளை யேனும். ஆறடி வளர்ந்த நல்ல ஆண்மையர் தோற்றம் விஞ்சும் மாறனோ ஆரன் தானோ மற்றெனின் சேரர் கோனோ வீறுடன் நீண்மே லாடை வீசுகை முழந்தாள் தோய

ஏறுபோல் நிமிர்ந்து செல்லும் இலக்குவனாரைக் காணோம். 72. உவப்பவே தலைக்கூ டிப்பின் உள்ளவே பிரியு முன்னர்த் தவப்பல நாளும் ஒக்கத் தனிச்சுவை விருந்தின் ஓம்பி எவர்க்குமுள் அழுக்கா றின்றி இயல்திறம் புகழ்ந்துபோற்றி நிவப்புறும் புலவர் செய்கை நிகழிலக் குவனார்க்காணோம். 73. பகலெல்லாம் மாண வர்க்குப் பகுத்தறி வுடன்கற் பித்து மிகலுள வொழிவு நேரம் மிளிர்குறள் நெறிநடாத்தித் தகுமொரு கைம்மா றின்றித் தமிழ்வளர் கழகம் நாட்டித் திகழ்வுறு தமிழ்த்தொண் டிற்குத் தினையுமோர் பாராட் டுண்டோ? 74. செந்தமிழ்ப் புலவன் என்கோ சிறந்தவா சிரியன் என்கோ செந்திற ஆய்வன் என்கோ செழுந்தமிழ் காத்தோன் என்கோ இந்தியை எதிர்த்து வேலை இழந்துசெல் சிறையன் என்கோ முந்துதொல் காப்பி யத்தை மொழிபெயர்த் தீந்தோன் என்கோ.

355