உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




356

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

75.

பல்கலைக் கழக ஆட்சிப் பதவியின் தகுதி யெல்லாம் மல்கிய புலவ ரேனும் மதுரையில் ஏமா றுண்டார்

புல்கியோர் வாய்மைஏட்டுப் புரவல ராகா மையின்

ஒல்கியே உள்ளம் விண்டார் ஓய்ந்திலக் குவனார் சென்றார். 76. எந்தையை இழந்தோம் என்பர் இன்னுயிர் இழந்தோம் என்பர் முந்தையை இழந்தோம் என்பர் முறைபிற சொல்வர் நாமோ இந்தியை எதிர்த்து வீழ்த்தி இருந்தமிழ் மீட்டுக் காக்கும் செந்தமிழ்ப் படையின் மானச் செம்மலை இழந்தோம் என்பேம். 77. தன்னலம் ஒன்று மின்றித் தமிழ்க்கென வாழ்க்கை ஏற்ற மன்னலப் புலவர் தேரின் மருவுபண் டார கர்தான் இந்நிலை ஒருவர் உண்டோ இலக்குவ னாரை ஒப்பார் இன்னலே தமிழ்க்கு நேரில் இன்னுடல் ஈய வல்லார். 78. இருந்தநாள் ஒன்றும் ஈயா திறந்தபின் இரங்கல் கூறல் வருந்தவே தானிந் நாட்டு வழக்கமாய்ப் போயிற் றந்தோ திருந்திய உண்மை அன்பர் தீர்ந்தவர் குடும்பத் திற்குப் பெருந்தொகை தண்டி யீக பெரிதொரு கழுவா யாகும்.

-

செந்தமிழ். இலக்குவனார் நினைவுமலர். வள். ஆண்டு 2004;

பிரமாதீச மார்கழி 1973 திசம்பர்

செல்வத்தம்மையார்க்கு இரங்கல்

79. செல்வ மேயெனும் செல்வஞ் சென்றதைச் செல்வி வாயிலாய்த் தெரிந்து வருந்தினேன் கொல்வ கையெனும் குறிப்பி லாமையாற் சொல்வி னைக்குமைச் சூழ்ந்த மர்த்தினேன். 80. புற்று நோயினாற் போன என்மனை பற்றி நீடியே பரிந்தொ ரீளையைப்

பெற்று ழந்தபின் பிழையை நோக்கியே முற்று நீக்கினென் முதல்வன் அருளினால்.

81. பெண்ணி னற்றுணை பிறிதொன் றின்மையால் நண்ணி வாழ்வதே நாயன் விரும்பினும் கண்ணி னன்மனை கணவன் கண்முனே கண்ணை மூடுதல் கருதின் நன்றரோ.