உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




358

பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்

வரதன் மனோகரன் மூர்த்திகண் ணையா சண்முகம் கணேசன் சிவசாமி யென்னும் பண்புறு சிங்கைப் பதினெண் தமிழர் அன்புரு பாமூ வாயிரத்து நூறு

இன்றமி ழன்னை இணையடிக் கையுறை என்றும் தமிழுல கேத்துதல் கடனே.

தமிழர் மதம் வெளியீட்டுதவி

87. திருமுல்லை வாயில் திகழ்முல்லை வாணன் மருவில்லான் முல்லை மறவன் - திருமுல்லை மூவா யிரமேலும் மொய்த்தவொரு நூறுருபா தூவா தளித்தான் தொகுத்து.

88. எங்கே யுமாறா இயன்முல்லை வாணன்சேர் சிங்கைத் தமிழன்பர் செய்கைகாண் - அங்கே இலங்கரச மும்மொழியுள் இன்றமிழும் ஒன்றாம் இலங்கையிலு மில்லாத ஏண்?

89. அரிமா புரமென்னும் அத்திருத் தீவில் அரிமா நிகர்முல்லை வாணன் -வரிமான் தமிழருவி' பாடித் தமிழருவி பாய இமிழிசையிற் செய்தான் இனிது.

90. மதத்தை மதியாது மாய்க்கவெனும் இக்கால் மதர்த்த தமிழர் மதநூல் - பதிக்கவெனத்

தானாகத் தண்டித்தந் தான்முல்லை வாணன்தான் ஏனோரைக் காணாத இன்று.

91. தமிழே உயிராகத் தாமுட லாக

இமிழும் கடல்சூழ் இகமேல் - தமிழர்

இருக்கின்றார் இன்றும் இதுமுல்லை வாணன் தருக்கொன்றும் வாழ்வின் தகை.

92. காண்மணியும் பாடுங் கடிகாரம் வான்சுவரில் நாண்மணியாய் ஆடி நளியிருளும் - கேண்மணியாய் இன்னிசையின் முந்தி யெழுவிக்க ஈந்தான்தான் முன்னியவா முல்லைவா ணன்.

23.9.72