உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

தமிழ் இலக்கிய வரலாறு

93. உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி இலகும் நிலமெனும் இன்றமிழ் நாட்டில்

இராம நாத புரநற் கோட்டம்

திருப்பத் தூரெனத் திகழும் வட்டம்

இரண சிங்க புரஞ்சேர் பெருமகன்

இராம பெரிவெள்ளைச் சாமியும் துணையாம் கார்பணி கற்பின் கருப்பா யம்மையும் பேர்பெறப் பெற்ற பெருந்தமிழ்க் குருசில் சிங்கை வணிகச் செழுங்கலைச் சாலை உரிமை யாளர் உயரிய முதல்வர் கோபால கிருட்டிணர் குலமொழிக் குதவிய அன்புறு வெண்பொன் ஐயா யிரத்தால் ஆரியர் தாறுமாறுகள் நீக்கியும்

வையா புரியர் பொய்யுரை தவிர்த்தும் மொழிநூல் மாணவன் முதுதேவ நேயன் எழுதிய தமிழிலக் கியவர லாறு

நேச மணிபதிப் பகவெளி யீடா ஆசிரி யன்மகன் மணிமன்ற வாணன் காட்டுப் பாடி விரிவின் மேற்பால்

தன்முழு வுரிமைத் தென்குமரி அச்சகம்

பெயர்பெற அச்சிட் டனனே

மயர்வறத் தமிழின் மாண்பு விளங்கவே.

பாவாணர் நூல்வெளியீட்டுக்குழு -

செங்காட்டுப்பட்டி

94. செட்டிகுளத் திற்குளித்த செந்தமிழ்த்தாய் செங்காட்டுப் பட்டியில் வந்து பருகப்பால் - அட்டியது

போல்வதே மீண்டும் பொலிந்தெழுந்த பாவாணர் நூல்வெளி யீட்டுக் குழு.

95. பாங்கா யமர்தலைமைப் பச்சைமுத்து நாகமுத்து ஓங்கும் இராமுபுல வேணுகோபால் - தாங்கும்

359